சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவே இல்லையா? – அன்புமணி ராமதாஸ் வேதனை
1 min read
Is there no end to the encroachment of Sinhalese soldiers? – Anbumani Ramdas Angam
17.11.2022
சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவே இல்லையா என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ராமேசுவரம் மீனவர்கள்
வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 14 பேரை அவர்களின் படகுடன் சிங்களப் படையினர் கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனர். சிங்களப் படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.
சிங்களக் கடற்படையினரின் அத்துமீறலை பா.ம.க. தொடர்ந்து கண்டித்து வருகிறது. மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். ராமேஸ்வரம் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் பிறகும் தொடரும் சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவே இல்லையா? மீனவர்கள் கைது விஷயத்தில் மத்திய அரசு இனியும் அமைதி காக்கக் கூடாது. இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இப்போது கைது செய்யப்பட்டவர்களையும், ஏற்கனவே கைதானவர்களையும் விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.