June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

13 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்

1 min read

Prime Minister Modi released the Tirukkural translation book in 13 languages

19.11.2022-
13 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்ப்பு புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

தமிழ் சங்கமம்

உத்தரபிரதேசத்தின் காசிக்கும் (வாரணாசி), தமிழகத்துக்கும் இடையே நீண்டகால பாரம்பரிய, கலாசார தொடர்பு உள்ளது. இதை புதுப்பிக்கும் நோக்கில் வாரணாசியில் ஒரு மாத காலத்துக்கு காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மத்திய அரசின் கல்வி அமைச்சகம் ஒருங்கிணைக்கும் இந்த நிகழ்ச்சியை, கலாசாரம், ஜவுளி, ரெயில்வே, சுற்றுலா, உணவு பதப்படுத்துதல், தகவல்-ஒளிபரப்பு உள்ளிட்ட அமைச்சகங்களும், உத்தரபிரதேச அரசும் இணைந்து நடத்துகின்றன.
இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இன்று தொடங்கிய காசி தமிழ் சங்கமம், டிசம்பர் 19-ந் தேதி வரை ஒரு மாதம் நடைபெற உள்ளது.

திருக்குறள்

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் திருக்குறள் மொழி பெயர்ப்பு புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். 13 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு திருக்குறள் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *