June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

இறந்த காதலியின் உடலுக்கு தாலி கட்டிய வாலிபர்

1 min read

A teenager tied a thali to the body of his dead girlfriend

20.11.2022
அசாமில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த தன் காதலியை வாலிபர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

காதல் சிலருக்கு பொழுதுபோக்காக உள்ளது. தற்போது உண்மையான காதல் இலகத்தியத்தி்ல்தான் உள்ளது. காதல் செய்வது போல் நடித்து கடைசியில் காதலியை ஏமாற்றி செல்பவர்களும் உண்டு. காதலியை ரெயிலில் தள்ளி கொன்றது, விஷம் வைத்து கொன்றது, ஆசிட் வீசுதல், காதலனை ஆள்விட்டு அடிப்பது போன்ற அடாவடி சம்பவங்கள் பல நடந்துள்ளன. சில காலதர்கள் ஒருவருக்கொருவர் பேசியே பிரிந்த விடுகின்றனர்.
இது தவிர ஒரு தலை காதலால் பலர் தற்கொலை செய்த சம்பவங்களும் நடக்கின்றன.
இப்படிப்பட்ட உலகில் இலக்கியத்தை மிஞ்சிய காதல் சம்பவம் ஒன்று அசாம் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
அசாமில் வசித்து வருபவர் பிதுவன் தாமுலி . இவர் 24 வயதான பிராத்தனா போராவை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார்.

உடலுக்கு தாலி

சமீபத்தில் காதலி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். காதலியின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாத தாமுலி கதறி துடித்து அழுதார். இந்த அழுகை காண்பவர் கண்களில் நீரை வரவழைத்தது. சமாதானம் ஆகி கண்ணீருடன் எழுந்து சென்று போராவின் கழுத்தில் தாலி கட்டி தான் இனி திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சத்தியம் செய்தார்.
இது தொடர்பாக அவர்களின் உறவினர்கள் கூறுகையில், “நாங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தோம். இதற்கான ஏற்பாடுகளைத் தொடங்க இருந்தோம். இருப்பினும், திடீரென யாரும் எதிர்பார்க்காத விதமாக பிராத்தனாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து கவுஹாத்தியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தோம். எவ்வளவோ முயன்றும் கூட அவரை டாக்டர்களால் காப்பாற்ற முடியவில்லை” என சோகத்துடன் கூறினார்.

இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் சோகத்திலும் பெரும் நெகிழ்ச்சியை உருவாக்கியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *