May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

கீழப்பாவூர் கோவிலில் நரபலி நடந்ததாக வதந்தி பரப்பியவர் கைது

1 min read

Arrested for spreading rumors of human sacrifice in Geezappavur temple

28.11.2022
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பகுதியில் நள்ளிரவில் சுடலைமாட சாமி கோவில் முன்பு நரபலி கொடுத்ததாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தியால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இது சம்பந்தமாக பாவூர்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நரபலி?

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் மெயின் பஜாரில் உள்ளது சுடலைமாடசாமி கோவில். இந்த கோவிலில் சுடலை மாடசாமி, சப்பாணி மாடசாமி, பார்வதி அம்மன், ஆகிய சுவாமி பீடங்கள் உள்ளது.
இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு சிலர் கேரள மந்திரவாதிகளை கொண்டு நரபலி கொடுத்து மாந்திரீக பூஜை நடத்தியகோடு, நரபலி கொடுத்த மனித உடல்களை புதைத்து அதன் மேல் பீடங்கள் அமைத்து வழிபட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.

இதனைப் பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் பெரும் பீதியும், பதட்டமும், பரபரப்பும் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் இதுபற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த சுடலைமாடசாமி கோவிலில் அது போன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெற்றதாக தெரியவில்லை.


மேலும் விசாரணையில் இப்படி ஒரு தவறான செய்தியை சமூக வலைத்தளங்களில் பரப்பியது யார் என்று விசாரித்த போது கிழப்பாவூர் யூனியன் அலுவலக தெருவை சேர்ந்த மாயாண்டி என்பவரது மகன் வேலு என்பது தெரிய வந்தது.

அவரைப் பிடித்து போலீசார் ஹர தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் மெயின் பஜாரில் உள்ள சுடலைமாடசாமி கோவிலிலுக்கு பாத்தியப்பட்ட 33 வரிதாரர்களில் 4 வரிதாரர்கள் மட்டும் தன்னிச்சையாக நேர்த்திக்கடன் என்ற பெயரில் கோவிலை புனரமைத்துள்ளனர். கோவில் காரியம் என்பதால் நேர்த்திக்கடன் செய்வதற்கு அந்த 30 வரிதாரர்களும் தடை செய்யவில்லை என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் அந்த 4 வரிதாரர்களும் அந்த கோவில் எங்கள் குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமானது என்று கூறி அந்த கோவிலை பூட்டிவிட்டனர். மேலும் மற்றவர்களை வழிபட அனுமதி மறுத்துள்ளனர் .இதனால் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் தனக்கு எதிராக உள்ள 30குடும்பத்தினர்களையும் பழிவாங்கும் எண்ணத்தில் கடந்த 23ஆம் தேதி நள்ளிரவில் சுடலை மாடசாமி கோவில் முன்பு சிலர் கேரள மந்திரவாதிகளை கொண்டு நரபலி கொடுத்து மாந்திரீக பூஜைகள் நடத்தி நரபலி கொடுத்த மனித உடல்களை புதைத்து அதன் மேல் பீடங்கள் அமைத்து பூஜை நடத்தியதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரப்பியுள்ளது தெரியவந்தது.

மேலும் இந்த வதந்தியை பரப்பிய மாயாண்டி என்பவரது மகன் வேலு என்பவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி அந்த 30 குடும்பங்களைச் சார்ந்தவர்கள் பாவூச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய மேல் விசாரணையில் கீழப்பாவூர் சுடலைமாடசாமி கோவில் முன்பு நரபலி எதுவும் நடைபெறவில்லை என்பது தெளிவாகத் தெரிய வந்துள்ளது. அந்த கோவிலுக்கு உரிமை கொண்டாட இடையூறாக உள்ள நபர்களை பழிவாங்கும் வகையில் வேலு என்பவர் இப்படி ஒரு பொய்யான தகவலை சமூகவலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார் என்பதும் உறுதியாக தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் வேலுவை கடுமையாக எச்சரித்து உடனடியாக அதே சமூக வலைத்தளங்களில் இந்தச் செய்திக்கு மறுப்பு தெரிவித்து ஒரு பதிவை வெளியிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள் .அதன்படி அந்த நபர் அந்தச் செய்தி தவறானது என்றும் அந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்தும் தவறான தகவலை பரப்பியதை ஒப்புக் கொண்டும் பதிவு வெளியிட்டுள்ளார் இதனால் அந்த பகுதி பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

ஆனாலும் பொதுமக்கள் மத்தியில் கடும் பீதியையும் அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பொய் செய்தியை பரப்பிய நபரை கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.