May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

ஷ்ரத்தா வாக்கர் படுகொலை எதிரொலி- டேட்டிங் ஆப்பில் இருந்து விலகி ஓடும் இளம்பெண்கள்

1 min read

Shraddha Walker Assassination Echoes- Teens Running Away From Dating App

28.11.2022

டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் கொடூர கொலை எதிரொலியாக டேட்டிங் ஆப், மேட்ரிமோனியில் இருந்து இளம்பெண்கள் பலர் விலகி ஓடுகின்றனர்.

ஷ்ரத்தா கொலை

டெல்லியில் இளம் காதல் ஜோடிகளாக திரிந்த 28 வயது ஷ்ரத்தா வாக்கர் மற்றும் அவரது காதலன் அப்தாப் அமீன் பூனாவல்லா இடையேயான உறவில் திடீரென விரிசல் ஏற்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக பூசல் நீடித்த நிலையில், மே மாதம் அதன் கோர முகம் வெளிப்பட்டது. தொடர்ந்து திருமணத்திற்கு வாக்கர் வற்புறுத்தியது அப்தாப்புக்கு எரிச்சல் உண்டு பண்ணியுள்ளது. இதனால், பல முறை கொலை முயற்சியில் ஈடுபட்டும் அது தோல்வியில் முடிந்து உள்ளது.
இந்த நிலையில், மே மாதத்தில் வாக்கரை கொலை செய்து, உடலை பிரிட்ஜில் மறைத்து வைத்துள்ளார். அதன்பின்பு, 35 துண்டுகளாக்கி டெல்லியின் பல பகுதிகளில் வீசி சென்றுள்ளார்.
சமீப நாட்களாக இதுபோன்ற கொடூர கொலைகள் அதிகரித்து வருகின்றன. உத்தர பிரதேசத்திலும், இதுபோன்று காதலி ஒருவர் காதலனால் கொல்லப்பட்டு துண்டுகளாக வீசப்பட்ட சம்பவம் நாட்டில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. வங்காளதேசத்தில் கூட திருமணம் முடிந்து அதனை மறைத்தது அறிந்து, கேள்வி கேட்டதற்காக இந்து பெண் ஒருவர் சமீபத்தில் கொடூர கொலை செய்யப்பட்டு, துண்டுகளாக்கப்பட்ட சம்பவம் மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டேட்டிங் ஆப்

பல பெண்களுடன் தொடர்பு: கணவனை கொன்று 22 துண்டுகளாக வெட்டி, பிரிட்ஜில் வைத்த மனைவி டெல்லி சம்பவத்தில் வாக்கர், அப்தாப் இருவரும் முதன்முதலாக டேட்டிங் ஆப் வழியே அறிமுகம் ஆகியுள்ளனர். பம்பிள் என்ற டேட்டிங் ஆப்பில் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து காதலை பரிமாறி கொண்டனர். தற்போது, வாக்கரின் படுகொலையால் பெண்கள் பலரும் அச்சத்தில் உள்ளனர்.
இதனால், மீண்டும் ஆன்லைன் டேட்டிங் ஆப்பை சமூக கண்காணிப்பின் கீழ் கொண்டு வரவேண்டும் என குரல்கள் ஒலிக்கின்றன. வாக்கரின் கொடூர கொலையால் சமீப காலங்களாக டேட்டிங் மற்றும் மேட்ரிமோனி ஆப்களை பயன்படுத்தி வரும் இந்திய இளம்பெண்கள் பலர் பயத்தில் உறைந்து போயுள்ளனர்.
இதனால் ஏற்படும் சமூக தொடர்புகளால் பணமோசடி, பாலியல் ரீதியான துன்புறுத்தல், பணம் கேட்டு மிரட்டல் போன்ற சம்பவங்கள் ஆண்களால், பெண்களுக்கு அதிகம் ஏற்பட்டு வருகிறது என கூறப்படுகிறது.
தொடக்கத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் பல பாதுகாப்பு அம்சங்களுடன் என்ற பெயரில், அறிமுகப்படுத்தப்பட்ட டின்டர் ஆப் மக்களிடையே வரவேற்பை பெற்றது. எனினும், குற்ற செயல்களில் ஈடுபடும் சிலரால் இதன் தவறான பயன்பாடும் அதிகரித்தது என்பதும் மறுக்க முடியாதது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.