May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

நடுரோட்டில் கயிறு இழுத்த கண்ணாயிரம்/நகைச்சுவை கதை/தபசுகுமார்

1 min read

Kannayiram pulling the rope in the middle of the road/Comedy story/Tapaskumar

29.11.2022
கண்ணாயிரம் குற்றாலம் செல்லும்வழியில் நெல்லை சென்றார். அங்கு தாமிரபரணி ஆற்றில் கண்ணாயிரம் மனைவி பூங்கொடி மற்றும் சுடிதார்சுதா உள்பட இளைஞர்கள் குளித்தனர். கண்ணாயிரத்துக்கு ஜலதோஷம்பிடித்திருந்ததால் அவர் குளிக்கவில்லை. ஆனால் தாமிரபரணி தண்ணியில் முகம்கழுவினால் முகம் பளபளப்பாகும் என்று சுடிதார்சுதா சொன்னதாலூம் தாமிரபரணி தண்ணியை பாத்திரத்தில் ஊற்றிவைத்தால் அந்த தண்ணீருக்கடியில் தாமிரம் கிடைக்கும் என்று பயில்வான் கூறியதாலும் கண்ணாயிரம் தாமிரபரணி தண்ணியை பக்கெட்டில் கொண்டுபோய்விடவேண்டும் என்று உறுதியாக இருந்தார். எல்லோரும் குளித்துவிட்டு புறப்பட்டபின் பூங்கொடியிடம் இந்த ரகசியத்தை சொன்னார். பின்னர் பூங்கொடி ஒருகையை பிடித்துக்கொள்ள கண்ணாயிரம் வளைந்து தாமரை பரணி ஆற்றில் பக்கெட்டில் தண்ணீர்பிடித்தார். அதைப்பார்த்த மீசைக்காரர் ஒருவர்…யாருப்பா தண்ணிபிடிக்கிறது என்று அதட்டலாக கேட்டார்.
அந்த குரல் கேட்டு கண்ணாயிரம் பயந்து பக்கெட்டில் தண்ணீர்பிடிக்காமல் நிமிர்ந்தார்.
அதான்ன கேட்டேன்..தாமிரம் நிறைஞ்ச இந்த ஆத்து தண்ணிக்கு காவல்காரரு போடாம இருப்பாங்களா..ஆளாளுக்கு தண்ணியை பிடிச்சிட்டுப்போயிட்டா என்ன ஆவுறுது..காவலாளியை சமாளிப்போம் என்று நினைத்தார்.
மீசைக்காரரைப் பார்த்து..அய்யா..ஒரேணரு பக்கெட் தண்ணி மட்டும் பிடிச்சிக்கிறேன்..கொஞ்சம் அனுமதி கொடுங்க என்று சொல்ல மீசைக்காரர் சிரித்தபடி..யோவ்..எத்தனை பக்கெட்டு தண்ணியும் பிடியும். அது தப்பில்ல..சகதி கிடக்கிற பக்கத்திலே..மல்லாந்து விழுந்தீருன்னா என்ன ஆகும்..உள்ளே போயிருவீரு..அதான் சத்தம் போட்டேன்..விவரம் இல்லாத ஆளா இருக்கீர..கொடும் பக்கேட்டை..நான் நல்ல தண்ணியா பிடிச்சித்தர்ரேன்..இந்த தண்ணி டேஸ்டுதான் திருநெல்வேலி அல்வாவே இனிக்குதுவே..தெரியுமா உமக்கு என்றார்.
கண்ணாயிரம் மலங்க மலங்க விழித்தப்படி பக்கெட்டை மீசைக்காரர் கையில் கொடுக்க..அவர் ஆற்றில் இறங்கி பக்கெட்டில் தாமிரபரணி தண்ணியை பிடிச்சிக்கொடுத்தார். கண்ணாயிரம் ரொம்ப நன்றிங்க என்றபடி அங்கிருந்து நடந்தார். மீசைக்காரர் பயித்தியகாரப்பய உள்ளேவிழுந்து மிதக்கப்பாத்தான் என்றபடி அங்கிருந்து சென்றார்.
கண்ணாயிரம் பூங்கொடியுடன் பஸ் நின்ற இடத்துக்கு பக்கெட்டுடன் நடந்தார். பூங்கொடியைப்பார்த்து..அந்த மீசைக்காரருக்கு இந்த ஆத்து தண்ணியிலே தாமிரம் இருக்கிறது தெரியாதுபோல…பயித்திக்காரப்பய…தாமிரபரணி தண்ணியிலே அல்வா இனிக்குன்னு மட்டும் தெரிஞ்சிவச்சிருக்காரு..நம்மள பயித்தியக்காரன்னு சொல்லுறாரு…என்று கண்ணாயிரம் சிரிக்க..பூங்கொடி பேசாம வாங்க..தண்ணிபிடிச்சிக் கொடுத்தவரை ஏசுறியளா..இரண்டு போடு போட்டிருந்தா சரியாயிருப்பிய..என்று திட்டினார்.
கண்ணாயிரம்..ஆ சத்தம்போடாத.. அவர் வந்திடப்போறாரு..என்று பதுங்கியபடி நடந்தார்.
ஆமா..பூங்கொடி அல்வா அல்வான்னு சொன்னாரே..அதை எங்கேபோய் சாப்பிடுறது என்று கேட்க..ம்..சாப்பிடுறதிலே இருங்க..இன்னும் டானிக் இருக்கு..என்று பூங்கொடி எச்சரிக்க கண்ணாயிரம் அது ஒருபக்கம் குடிக்கவேண்டியதுதான்..அல்வா ஒருபக்கம் சாப்பிடவேண்டியதுதான்..என்றார்.
பக்கெட் தண்ணீரை சுமந்தபடி கண்ணாயிரம் பஸ்சை அடைந்தார். பூங்கொடி அவரிடம் பக்கெட்டை எங்கிட்ட கொடுங்க…என்க கண்ணாயிரம்..ஏய்..நீ தண்ணியை சிந்திறுவ..நானே கொண்டுவர்ரேன் என்றபடி பஸ்படிக்கட்டில் கால்வைத்து ஏறினார். தண்ணீர் சிந்திடாமல் மெல்ல மெல்ல தன் இருக்கையை நோக்கி நகர்ந்தார்.
அவரைப்பார்த்த சுடிதார் சுதா..என்ன கண்ணாயிரம் பக்கேட்டில் தண்ணீ என்று கேட்க…ஒண்ணுமில்ல…என்றபடி நகர்ந்தார்.
சுடிதார் சுதா பஸ்சில் கயிறு கட்டி துணிகளை காயவைப்பதைப் பார்த்த கண்ணாயிரம்..ஆ நம்மளும் கயிறு கட்டி துணியைக் காயப்போடலாம் போல என்று நினைத்தார்.பக்கெட் தண்ணீரை பத்திரமாக இருக்கையின் கீழ் மூடி வைத்தார். சரி..சரி வாங்க சாப்பிட்டுவிட்டு வருவோம் என்று பூங்கொடி அழைக்க..கண்ணாயிரம்…ஏய்..பக்கெட்டில் உள்ள தண்ணியை தூக்கிக்கிட்டு போயிடுவாங்க…நீ இங்கே இரு..நான் சாப்பிட்டுவிட்டு உனக்கு வாங்கிவர்ரேன்..என்றார். பூங்கொடி..ம்..உங்களை திருத்தமுடியாது..சீக்கிரம் போயி சாப்பிட்டுட்டு வாங்கிட்டுவாங்க…நான் இங்கே இருக்கேன் என்றார்.
கண்ணாயிரம் வேட்டியை மடக்கிகட்டிக்கொண்டு பஸ்சைவிட்டு இறங்கினார்.அருகில் உள்ள ஓட்டலில் கூட்டம் அதிகமாக இருந்தது..இதனால் சிறிது தூரம் நடந்து கூட்டம் இல்லாத ஓட்டலுக்கு போனார். சர்வர் என்ன வேணும் என்று கேட்க..சாப்பாடு..சாப்பாடு என்றார் கண்ணாயிரம்.
அதைக்கேட்டதும்… ஏங்க இது டிபன் கடை சாப்பாடு கிடையாது..இரவு டிபன்தான் உண்டு என்று சர்வர் சொல்ல கண்ணாயிரம் கடுப்பாகினார். அட..என்னங்க..சாப்பாடு இல்லைங்கிறிய என்றபடி சிறிது தூரம் நடந்தார். அங்கு கூட்டம் குறைவாக இருக்க..ஓலை குடிசைக்குள் இருந்த ஓட்டலுக்குள் நுழைந்தார்.வீட்டு மண்பானை சமையல்..மணக்கும் சாம்பார்..ருசியான பொரியல் என்று போர்டில் எழுதிப்போடப்பட்டிருந்தது. ஆஹா..அருமை..அருமை..ஒரு பிடிபிடிக்க வேண்டியதுதான் என்றபடி சேரில் அமர்ந்தார். ஒரு சிறுவன் ஓடிவந்து என்ன வேணும் என்று கேட்க..கண்ணாயிரம் கயிறு என்று உளற…சிறுவன் புரியாமல் என்ன தயிரா..தனியா கிடையாது சாப்பிட்டா தருவோம் என்றான்.
கண்ணாயிரம் தனது உளறலை புரிந்துகொண்டு கயிறுவாங்கணுமுன்னு நினைச்சதை ஓட்டலில் வந்து சொல்லிப்புட்டோம்..எல்லாம் தடுமாற்றம்தான்..சரி தம்பி..எனக்கு தயிறு வேண்டாம்..தொண்டை சரியில்லை..மண்பானை சமையல் சாப்பாடு வேண்டும் என்றார். சரி என்று சிரித்தபடி சிறுவன் உள்ளறைக்குள் சென்றான். பின்னர் ஒரு பெண் உள்ளிருந்து வாழையிலையுடன் வெளியே வந்து கண்ணாயிரம் முன்வைத்தார். டம்ளரில் தண்ணீர் கொண்டுவைக்க..கண்ணாயிரம் வாழை இலையில் தண்ணீரை ஊற்றி கழுவியபின் அந்த பெண் அந்த இலலயில் சோறுவைத்து சாம்பார் ஊற்றினார். நாலுவகை கூட்டுவைத்து ஊறுகாயும் வைத்தார்.கண்ணாயிரம் சாம்பாரில் சோற்றை பிசைந்து உச்கொட்டி சாப்பிட்டார். அப்பளம் இல்லையா என்று கேட்டுவாங்கி சாப்பிட்டார். அப்புறம்..ரசம். ஆ..நல்லா இருக்கு என்று கையில் வாங்கி குடித்தார்.
இது வீட்டு மண்பானை சமையல்தானே என்று மீண்டும் கேட்டார். அந்த பெண்..ஆமாங்க..இதிலே என்ன சந்தேகம் ..நல்லாசாப்பிடுங்க.. உங்களைப்பாத்தா..காணாமல்போன எங்க அண்ணன்தான் நினைவுக்கு வருது என்றார்.
உடனே கண்ணாயிரம்..என்ன உங்க அண்ணன் காணாம போயிட்டாரா..என்னபேரு என்று கேட்க அந்த பெண்..அதுவா கண்ணாயிரம்..என்றார்.
அதைக்கேட்டதும் கண்ணாயிரத்துக்கு தூக்கிவாரிப்போட்டது..என்னங்க சொல்லூறீங்க..அவருக்கு எந்த ஊரு என்று கேட்க அவருக்கு விழுப்புரம் என்றார் அந்த பெண்.
அதைக்கேட்ட கண்ணாயிரம்..என்னங்க சொல்லுறீங்க..அது சின்ன கண்ணாயிரம்..என் பிரண்டு..உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடமுண்ணு கடனை வாங்கி நின்னான்.யாரோ கடத்திட்டுப்போயிட்டாங்க..ஆளைக்காணோம்..தேடிக்கிட்டு இருக்கோம் என்றார்.
அந்த பெண் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. நீங்க..அவரு பிரண்டா..சீக்கிரம் அவரை கண்டுபிடிங்க..உங்களுக்கு எந்த ஊரு என்றுகேட்டார். கண்ணாயிரம்..அதுவாம்மா…புதுச்சேரி..என்றார்.
கண்ணாயிரம் சாப்பிட்டு முடிந்தவுடன் ஒரு பார்சல் என்றார். அந்த பெண்.இதோ..கட்டித்தர்ரேன் என்று உள்ளறைக்கு சென்றார். சிறிது நேரத்தில் சாப்பாடு பார்சலை கண்ணாயிரத்திடம் நீட்ட அவர் வாங்கிக்கொண்டு ரூபாயைக் கொடுத்தார். அந்த பெண்..ஏங்க என் அண்ணனின் பிரண்டுன்னு சொல்றீங்க..ரூபா வேண்டாம் என்க…கண்ணாயிரமோ..என் நண்பனின் தங்கச்சி நீங்க..பிடிங்க..ரூபாயை..பணத்தை வாங்காட்டி பூங்கொடி கோவச்சிக்கிடும் என்றார். யார் பூங்கொடி என்று அந்த பெண் கேட்க..என் பொணாடாட்டி என்று சொல்ல அந்த பெண் ரூபாயை வாங்கிக்கொண்டு சில்லறைக் கொடுத்தார்.
கண்ணாயிரம் நன்றி சொல்லிவிட்டு பார்சல் சாப்பாடுடன் நடந்தார். வழியில் கடையில் பிளாஸ்டிக் கயிறு தொங்கவிட்டிருந்த கடையைப்பார்த்தார். கடைக்கு சென்று பிளாஸ்டிக் கயிறு என்று சொல்ல கடை ஊழியர் எடுத்துக்கொடுத்தார். கண்ணாயிரம் அந்த கயிறைப்பார்த்து..இது நல்ல பலமா இருக்குமா..கொஞ்சம் இழுத்துப்பாக்கலாமா என்று கேட்டார். கடை ஊழியர் நல்லபலமாகத்தான் இருக்கும் வாங்கிட்டுப்போங்க என்க..கண்ணாயிரமோ..எதையும் சரிபார்த்துதான் வாங்கணுமுங்க..வாங்க ரோட்டுக்கு..நீங்க அந்தப்பக்கம் பிடிங்க..நான் இந்தப்பக்கம் பிடிக்கிறேன் ..இழுத்துப்பாப்போம்..சரியா இருந்தா வாங்கிறேன் என்றார்.
கடை ஊழியர்.என்னடா..காலையிலே இப்படியொரு சோதனை..நமக்கு வியாபாரம் வித்தாகணும்..சரி சமாளிப்போம் என்றபடி…சரி சரி..வாங்க கயிறை இழுத்துப்பாப்போம் என்றார்.
கண்ணாயகரமும் சாப்பாடு பார்சலை கடையில் வைத்துவிட்டு ரோட்டுக்குவந்தார். கடை ஊழியரும் கண்ணாயிரமும் அந்த பிளாஸ்டிக் கயிறை ஆளுக்கு ஒரு முனையைப்பிடித்து இழுத்தனர்.ம்..ம்..ம்…ம் என்று கண்ணாயிரம் தம்கட்டி இழுக்க கடை ஊழியரை கடை முதலாளி..அங்கே என்னல பண்ணுற..இங்கேவா என்க அந்த ஊழியர் கயிற்றை திடீரென்றுவிட்டு விட்டு ஓட..கண்ணாயிரம் நிலை குலைந்து கீழே பொத்தென்றுவிழுந்தார்.
அதைப்பிர்த்து எல்லோரும் சிரிக்க..கண்ணாயிரம்..ஆ..கையிலே காயமாயிட்டே..என்று முணங்கினார். அங்கு உள்ளவர்கள் அவரை தூக்கிவிட..கண்ணாயிரம் அப்பாட..ஒரு பலமான கயிறுவாங்க என்ன கஷ்டப்படவேண்டியது இருக்கு என்றபடி எழுந்தார்.
பின்னர் கடைக்காரரிடம் பிளாஸ்டிக்கயிறு வாங்கிக்கொண்டு சாப்பாடு பார்சலுடன் பஸ்சை நோக்கி நடந்தார். பஸ்முழுவதும் கயிறு கட்டி துணி தொங்கவிட்டிருந்தாராகள்அட…நம்மவரமுன்னால..பஸ்முழுவதும் தொங்கவிட்டுவிட்டார்களே..ஒரு ஆளு எதை செஞ்சாலும் அத்தனைபேரூம் அதையே காபி அடிப்பாங்க ..என்ன உலகமடா என்று முணங்கினார்.
என்ன ஆச்சு..சீக்கிரம் வாங்க..வயிறு பசிக்குது என்று பூங்கொடி திட்ட கண்ணாயிரம் வேகமாகசென்று பார்சலை கொடுத்தார். இது சாதாரண சாப்பாடு இல்லை..வீட்டு மண்பானை சமையல் தெரியுமா..நான் எங்கேல்லாம் அலைஞ்சுவாங்கிட்டு வந்தேன் தெரியுமா..நம்ம சின்ன கண்ணாயிரம் தங்கச்சிக்கடையிலே வாங்கினேன் என்று பெருமையுடன் கூறினார்.
பூங்கொடி பசியுடன் இருந்ததால் கண்ணாயிரம் சொல்வதை கேட்காமல் சாப்பிட தயாரானார். கண்ணியிரம் மூடிவைத்திருந்த பக்கெடில் உள்ள தண்ணீரில் கை கழுவமூயல..கண்ணியிரம் கோபத்தில்.ஆ…அது தங்கம்..ஆ.தாமிரம் வேஷ்டு பண்ணக்கூடாது…தினம் தினம் திறந்து பாக்கணும் உள்ளே தாமிரம் படிஞ்சிருக்கும்..அதை நாமவிக்கலாம் என்றார்.
என்ன சத்தம் என்றபடி சுடிதார்சுதாவர
கண்ணாயிரம்..ஒண்ணுமில்ல.. என்று சமாளித்தார். அவரைப்பார்த்த சுடிதார்சுதா மெல்ல..கண்ணாயிரம் ..தாமிரபரணி தண்ணியிலே முகம்கழுவினியளா..முகம் கொஞ்சம் பளபளன்னு தெரியுது என்க..கண்ணாயிரம் அப்படியா..என்று கன்னத்தை தடவிப்பார்த்தார். பூங்கொடி முறைத்ததும்..கண்ணாயிரம்..ஆ..அடிவிழுந்தாலூம் சிவக்கும் என்று நினைத்தவர்..ஒண்ணூமில்ல என்று பல்லைக்காட்டி சிரித்தார்.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.