June 15, 2026

Seithi Saral

Tamil News Channel

திருவண்ணாமலையில் மகா தீபம் நாளையுடன் நிறைவு

1 min read

Maha Deepam at Thiruvannamalai will conclude tomorrow

15/12/2022
திருவண்ணாமலை மலை மீது கடந்த 6ம் தேதி ஏற்றப்பட்ட மகாதீபம் நாளையுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து ஜனவரி 6-ந் தேதிக்கு பிறகு மகா தீப மை பக்தர்களுக்கு வழங்கப்படஉள்ளது.

மகாதீபம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 27ம்தேதி தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் நடந்தது. விழா வின் நிறைவாக, கடந்த 6ம்தேதி மாலை 6 மணியள வில், 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப் பட்டது. ஆண்டுதோறும் மலை மீது ஏற்றப்படும் மகாதீபம், தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிப்பது மரபு.
அதன்படி தினமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டு வருகிறது. நேற்று 10வது நாளாக மகாதீபம் மலையில் காட்சியளித்தது. மாண்டஸ் புயல், கனமழை மற்றும் தொடர்ந்து வீசும் பலத்த காற்றிலும் மகாதீபம் தொடர்ந்து காட்சியளித்தது.

இந்நிலையில், மலை மீது காட்சி தரும் மகாதீபம் நாளை இரவுடன் நிறைவு பெறுகிறது. அதைத்தொடர்ந்து, நாளைமறுநாள் (17ம் தேதி) காலை தீப கொப்பரையை மலையில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு கொண்டுவரப்படுகிறது. பின்னர், தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் முடிந்ததும், கோயில் 5ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்படும்.

மை

ஜனவரி 6ம்தேதி அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின்போது, மகாதீப மை (தீபசுடர் பிரசாதம்) சிவ காமசுந்தரி சமேத நடராஜருக்கு அணிவிக்கப்படும். அதன்பிறகு, பக்தர்களுக்கு தீப மை வழங்கப்படும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *