ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாத நடவடிக்கை 168 சதவீதம் குறைந்துள்ளது- மந்திரி அனுராக் தாகூர் தகவல்
1 min read
Terrorist activity has reduced by 168 percent in Jammu and Kashmir – Minister Anurag Tagore said
19.12.2022
ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாத நடவடிக்கை 168 சதவீதம் குறைந்துள்ளது என மத்திய மந்திரி அனுராக் தாகூர் கூறியுள்ளார்.
மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை மந்திரி அனுராக் தாகூர் டெல்லியில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தீவிரவாதம்
பிரதமர் மோடி அரசு, ‘தீவிரவாதத்திற்கு எதிரான ஜீரோ சகிப்புத்தன்மை கொள்கை’யைக் கொண்டுள்ளது. தீவிரவாதத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட தீவிரமான நடவடிக்கைகள் உறுதியான பலனைத் தந்துள்ளன. உரி தாக்குதலுக்கு எதிராக 2016-ம் ஆண்டு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டது. 2019-ம் ஆண்டு நிகழ்ந்த புல்வாமா குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பதிலடியாக பாலகோட் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் கலவரத்தின் மூலமாக நிகழும் வன்முறைகள் 80 சதவீதம் குறைந்துள்ளது. பொதுமக்களின் இறப்பு விகிதம் 89 சதவீதமாக குறைந்துள்ளது, 6,000 போராளிகள் சரணடைந்துள்ளனர்.
168 சதவீதம்
மோடி ஆட்சியின் கீழ், ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாத நடவடிக்கை 168 சதவீதம் குறைந்துள்ளது. தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளிக்கும் குற்றம் 94 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை இடதுசாரி தீவிரவாத நடவடிக்கைகள் இருமடங்கு, அதாவது 265 சதவீதம் குறைந்துள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் கீழ் வடகிழக்கு மாநிலங்களில் அமைதிக்கான புதிய சகாப்தம் தொங்கியுள்ளது.
திரிபுரா,மேகாலயா மாநிலங்களில் முழுவதுமாகவும், அசாமில் 60 சதவீதமும் ஆயுதப்படைக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த மண்டலங்களில் அமைதியை நிலைநாட்ட 2020-ம் ஆண்டு போடோ ஒப்பந்தம், 2021-ம் ஆண்டு கர்பி அங்லாங் ஒப்பந்தம், 2022-ம் ஆண்டு அசாம் – மேகாலயா இடையிலான எல்லைப் பிரச்சினை தொடர்பான ஒப்பந்தம் என பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.