கடத்தல் நாடகம் நடத்தி காதலனை திருமணம் செய்த பெண்
1 min read
A girl who staged a kidnapping drama and married her boyfriend
20.12.2022
கடத்தல் நாடகம் நடத்தி காதலருடன் சென்று திருமணம் செய்து கொண்டதாக ஒரு பெண் தன் தந்தைக்கு வீடியோவில் தெரிவித்துள்ளார்.
கடத்தல்
தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா ஸ்ரீ சில்லா மாவட்டம் முட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரய்யா. தன்னுடைய மகள் ஷாலினியுடன் (வயது18) இன்று காலை அதே ஊரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றார். சாமி கும்பிட்ட பின் இரண்டு பேரும் கோவிலில் இருந்து வெளியே வந்தனர்.
அப்போது அங்கு காருடன் காத்திருந்த நான்கு பேர் சாலினியை காரில் ஏற்றி கடத்தி சென்றனர். மகளை கடத்தி செல்பவர்களை தடுத்து நிறுத்த முயன்ற சந்திரய்யா மீது அவர்கள் தாக்குதல் நடத்தி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இந்த சம்பவம் பற்றி சந்தரய்யா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சந்திரய்யா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பதிவாகி இருக்கும் இளம்பெண் கடத்தல் தொடர்பான காட்சிகளை கைப்பற்றி அடிப்படையில் ஷாலினியை கடத்தி சென்ற நான்கு பேரையும் தீவிரமாக தேடி வந்தனர்.
திருமணம்
இந்த நிலையில் சற்று நேரத்திற்கு முன் வீடியோ ஒன்றை வெளியிட்ட ஷாலினி, நானும் ஜான் என்பவரும் கடந்த நான்காண்டுகளாக காதலித்து வருவதாகவும், எங்கள் காதலை குடும்பத்தினர் ஏற்கவில்லை என்பதால் நாங்கள் ஏற்கனவே திட்டம் போட்டு கடத்தல் நாடகம் நடத்தி காதலருடன் சென்று திருமணம் செய்து கொண்டேன் என்று அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.
இந்த வீடியோவை பார்த்த தந்தை மகளின் நிலைமை நினைத்து நிலைகுனிந்து போனார்.