June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

பாராளுமன்றத்தில் கூச்சல், குழப்பம்- இரு அவைகளும் 6ம் தேதி காலை வரை ஒத்திவைப்பு

1 min read

Shout and confusion in Parliament – Adjournment of both Houses till the morning of the 6th

3.2.2023
பாராளுமன்றத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டதால் இரு அவைகளும் 6ம் தேதி காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.

பாராளுமன்ற கூட்டம்

2023ம் ஆண்டிற்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. பின்னர் நேற்று பாராளுமன்றத்தில் 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நேற்று காலை பாராளுமன்ற மக்களவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

ஒத்திவைப்பு

இதேபோல், இன்று காலை வழக்கம்போல் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூட்டம் தொடங்கியது. அப்போது, அதானி குழும விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தால் மக்களவை 2 மணி வரையிலும், மாநிலங்களவை 2.30 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் மக்களவை 2 மணிக்கும், மாநிலங்களவை 2.30 மணிக்கும் கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் மீண்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளும் வரும் 6ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைத்து அறிவிக்கப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *