May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

கடையம் வட்டாரத்தில் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

1 min read

Inspection by horticulture department officials in Khadayam district

16/2/2023
கடையம் அருகே மந்தியூர் கிராமத்தில் கூடுதல் தலைமைச்செயலாளர் மற்றும் திட்ட இயக்குனர் ஜவகர் ஐ.ஏ.எஸ் தமிழ்நாடு நீர் பாசன மேலாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தில் தோட்டக்கலை பணிகளை நேரில் ஆய்வு செய்தனர். மாலதி நிபுணர் குழுவிற்கு தோட்டக்கலை துறை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை குறித்து விளக்கி கூறினார்.

தமிழ்நாடு நீர்ப்பாசன மேலாண்மை நவீன மயமாக்கல் திட்டம் உலக வங்கியின் நிதி உதவியோடு தமிழகத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை,பொதுப்பணித்துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம், மீன்வளத்துறை, பட்டு வளர்ச்சி துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் இணைத்து தமிழக அரசு செய்து வருகிறது. கடையம் வட்டாரம் மந்தியூர் கிராமத்தில் கூடுதல் தலைமைச்செயலாளர் மற்றும் திட்ட இயக்குனர் ஜவகர் ஐ.ஏ.எஸ் மற்றும் எம்.டி.பி.யூ. அதிகாரிகள் தமிழ்நாடு நீர் பாசன மேலாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தில் தோட்டக்கலை பணிகளை நேரில் ஆய்வு செய்தனர்.
விவசாயிகளிடம் கலந்துரையாடல் செய்த இந்த குழு, திட்டத்தின் பயன்பாடு குறித்தும் தோட்டக்கலை – மலை பயிர்கள் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நுண்ணீர் பாசனம் குறித்தும் மற்றும் கடையம் வட்டாரத்தில் தென்னையில் ஊடுபயிராக பயிரிட்டுள்ள கத்திரி அதனால் பயனடைந்து நெல்லியில் ஊடு பயிராக சிறு கிழங்கு சாகுபடி,மகசூல் செய்து வருவது குறித்தும் அங்குள்ள முன்னோடி விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.
அப்போது அங்ககப்பண்ணைய இடு பொருட்கள் தயாரித்து பயன்படுத்துவதாகவும் விவசாயி விளக்கிக்கூறினர். ஆய்வில் தென்காசி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி நிபுணர் குழுவிற்கு தோட்டக்கலை துறை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை குறித்து விளக்கி கூறினார். ஆய்வின் போது தென்காசி தோட்டக்கலை உதவி இயக்குநர் தங்கம், கடையம் வட்டார தோட்டக்கலை அலுவலர் சபா பாத்திமா, உதவி தோட்டக்கலை அலு வலர்கள் கோவிந்தராஜன், திருமலைக் குமார், பார்த் தீபன், பானுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.