May 2, 2024

Seithi Saral

Tamil News Channel

மண்டைக்காடு பகவதி அம்மான் கேவில் மாசி கொடைவிழா 5-ந தேதி தொடங்குகிறது

1 min read

Mandaikkadu Bhagavathy Amman Temple Masi Kodai Festival starts on 5th

17.2.2023
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா வருகிற 5-ந் தேதி தொடங்கு மார்ச் 14-ந் தேதி வரை நடக்கிறது. இதில் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.

மண்டைக்காடு

கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள்
நிருவாகத்திற்குட்பட்ட மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயிலில் 2023-
ஆம் ஆண்டு மாசிக்கொடை பெருந்திருவிழாவானது வருகிற 5ந் தேதி அன்று திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி 14.3.2023 அன்று ஒடுக்கு பூஜையுடன் நிறைவு பெறுகிறது.
இந்த திருவிழா முதல்நாள் கொடியேற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் கவல் தொழில்நுட்பவியல்
மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டு திருவிழா தொடர்பான கலைநிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கவுள்ளார்கள். மேலும், பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி
பிரதிநிதிகள், பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.

சுகி சிவம்

திருவிழா முதல்நாள் நிகழ்ச்சியான ஆன்மீகவிழாவில் சொல்வேந்தர் சுகி சிவம் அவர்கள் கலந்து
கொண்டு ஆன்மீக உரை ஆற்றவுள்ளார்கள். முக்கிய நிகழ்ச்சியாக திருமுருக வள்ளல் வாரியார் சுவாமிகளின் மாணவி கலைமாமணி வாகீச கலாநிதி
தேசமங்கையர்க்கரசி , இசைபேரொளி எஸ்.மகதி குழுவினர்
(கர்நாடக இசை மற்றும் திரைப்பட பின்னணி பாடகி) வழங்கும் கர்நாடக மற்றும் பக்தி இன்னிசையும், இறை இசை தென்றல் சபரிமலை ஹரிவராசனம் விருதுபெற்ற
கலைமாமணி வீரமணி ராஜூ குழுவினரின் மாபெரும் பக்தி இசையும் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற இருக்கிறது.

திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி,
கழிப்பிட வசதி, மின் ஒலி, ஒளி வசதி போன்ற அனைத்து வசதிகள் திருக்கோயிலின்நிர்வாகத்தின் மூலம் செய்யப்பட்டு வருகிறது.
மேற்கண்ட தகவலை கன்னியாகுமரி மாவட்ட இந்து
சமய அறநிலையத்துறை இணை ஆணையர் திரு.இரா.ஞானசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.