June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் சீமானுக்கு எதிராக போராட்டம் -திராவிடர் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது

1 min read

Protest against Seaman in Tenkasi – Dravidian Tamil Party officials arrested

21.2.2023
நாம் தமிழர் கட்சி நிறுவன தலைவர் சீமான் தொடர்ந்து அருந்ததியினர் சமுதாயத்தினரை அவதூறாக பேசி வருவதை கண்டித்து திராவிட தமிழர் கட்சியினர் தென்காசி புதிய பஸ்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட திராவிடத்தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் கருவீர பாண்டியன் தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் லெட்சுமணன், மாவட்ட இளைஞணி செயலாளர் சங்கை மதன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆலங்குளம் ஒன்றிய தலைவர் மனோகரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பூர்வக்குடி அருந்ததியர் மக்களை வந்தேறிகள் என கூறிவருவதாகவும் தொடர்ந்து அவதூறாகவும் அடாவடித்தனமாகவும் பேசிவரும் மலையாளி சீமானை கைது செய்வதோடு அவரது நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.

உருவபொம்மை

அதனைத் தொடர்ந்து அவர்கள் சீமானின் உருவ பொம்மையை தீ வைத்து எரிக்க முயற்சி செய்தனர். இதனைப் பார்த்த அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களிடம் இருந்து உருவ பொம்மையை பறித்துச் சென்றனர்.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சீமானின் உருவப்படத்தை தீ வைத்து எரித்தனர். இதைத் தொடர்ந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்ட தென்காசி மாவட்ட திராவிடத்தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் கருவீர பாண்டியன், தென்காசி
மாவட்ட தலைவர் லெட்சுமணன், மாவட்ட இளைஞணி செயலாளர் சங்கை மதன், ஆலங்குளம் ஒன்றிய தலைவர் மனோகரன் மற்றும் நிர்வாகிகள் சரவணன், ராஜ் மீனா ஆகியோரை தென்காசி போலீசார் கைது செய்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *