May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

வடலூரில் ரூ.மூன்றரை லட்சத்துக்கு குழந்தை விற்பனை- பெண் டாக்டர் உள்பட 4 பேர் கைது

1 min read

Sale of baby for Rs.3.5 lakh in Vadalur- 4 people including a female doctor were arrested

22.2.2023
வடலூரில் ரூ.மூன்றரை லட்சத்துக்கு குழந்தை விற்பனை
தொடர்பாக பெண் டாக்டர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

குழந்தை

கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் அருள்முருகன் இவரது மனைவி சுடர்விழி (வயது 37).இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. அருள்முருகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சுடர்வழி புதுச்சத்திரம் அடுத்த பொத்தாங்குப்பத்தில் வசித்து வரும் தனது அக்காள் சுதாவின் கணவர் விஸ்வநாதனிடம் தன்னிடம் ஒரு ஆண் குழந்தை உள்ளதாகவும் அதற்கு பிறப்புச் சான்றிதழ் வாங்கித் தரும் தாருங்கள் என கேட்டுள்ளார்.
இதை எடுத்து விசுவநாதன் அந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கு பல்வேறு வகையில் முயற்சி செய்தார் இருப்பினும் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அவரால் பிறப்புச் சான்றிதழ் வாங்க முடியவில்லை.

தொட்டில் குழந்தை

மேலும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்ததில் பிறப்புச் சான்றிதழ் இல்லாமல் பிறர் அது குழந்தையை வைத்திருந்தால் போலீசில் சிக்கிக் கொள்வாய் என கூறியுள்ளார் இதனால் குழந்தையை கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தொட்டில் குழந்தை திட்டத்தில் கொடுத்து விடலாம் என இருவரும் முடிவு செய்துள்ளனர் அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு விஸ்வநாதன் கடலூர் கலெக்டர் அலுவலகம் சென்று, அங்கிருந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம், தொட்டில் குழந்தை திட்டத்தில் குழந்தையை சேர்ப்பது குறித்து விசாரித்துள்ளனர்.

அப்போது அவர், முன்னுக்குப் பின்னும் முரணாக பேசியதாக தெரிகிறது இதனால் சந்தேகம் அடைந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்த், இது தொடர்பாக புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் அதன் பெயரில் போலீசார் விஸ்வநாதன் இடம் விசாரணை நடத்தினர் அப்போது அவர் வடலூரில் உள்ள சுடர்விழியிடம் குழந்தை இருப்பதாக தெரிவித்தார்.

மூன்றரை லட்சம் ரூபாய்க்கு

இதையடுத்து சிதம்பரம் கூடுதல் போலீஸ் சூப்பர் ரகுபதி தலைமையிலான போலீசார் சுடர்விழியை பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்,வடலூர் கோட்டக்கரை பகுதியில் வசித்து வந்த சித்த மருத்துவர் மெகருன்னிசா(67) என்பவரிடம் கடந்த டிசம்பர் மாதம் 13-ந்தேதி பிறந்த 2 மாதங்களே ஆன ஆண் குழந்தையை ரூ.3 1/2 லட்சத்துக்கு வாங்கியது தெரியவந்தது. அதற்கு பிறப்புச் சான்றிதழ் இல்லாததால் குழந்தையை வேறு யாரிடம் விற்க முடியாது என்பதால் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்க முயன்ற போது சிக்கிக் கொண்டார்.
இதையடுத்து சித்த மருத்துவர் மெகன்னி சாவிடம் விசாரணை நடத்தியதில்,வடலூர் நரிக்குறவர் காலனியை சேர்ந்த ஆனந்த் என்பவர், கீரப்பாளையம் நரிக்குற காலனியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் குழந்தையை வாங்கி அதனை மெகருன்னிசாவிடம் கொடுத்து தெரிய வந்தது. மேலும் அதற்கு கீரைப்பாளையம் நரிக்குறவர் காலனி சேர்ந்த கஜேந்திரன் மனைவி ஷீலா (37), மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரத்தை சேர்ந்த செல்லக்குட்டி மகன் ஆனந்தன்(47)ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுடர்விழி,சித்த மருத்துவர் மெகருன்னிசா, ஷீலா, ஆனந்தன் ஆகியோர் கைது செய்தனர் மேலும் 2 மாத ஆண் குழந்தை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரி சேர்த்தனர் அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
இதற்கிடையே குழந்தையை விற்ற ஆனந்த் என்பவரை போலீசார் பிடித்து குழந்தை பெற்றோர் யார்? எதற்காக குழந்தையை விற்றனர்? என்பது தொடர்பான தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.