May 13, 2024

Seithi Saral

Tamil News Channel

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் கைது

1 min read

Arrested teacher who won the National Good Writer Award

25/2/2023
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற பரமக்குடி ஆசிரியரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.

நல்லாசியர்

பரமக்குடி அருகேயுள்ள கீழம்பல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ராமச்சந்திரன்(வயது 38). ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த 2022 ம் ஆண்டிற்கான நல்லாசிரியர் விருதுக்கு தமிழ்நாடு சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் ஒருவரே தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார். பின்பு செப்டம்பர் 5ஆம் தேதி டெல்லியில் நடந்த ஆசிரியர் தினவிழாவில் குடியரசு தலைவரிடம் ஆசிரியர் ராமச்சந்திரன் பள்ளி சீருடை அணிந்து சென்று தேசிய நல்லாசிரியர் விருது பெற்றார்.

சகோதரர்

இவரது சகோதரர் பஞ்சாட்சரம் இன்ஃபர்மேஷன் நெட்வொர்க் என்ற நிறுவனம் மதுரை, ராமநாதபுரம் இடங்களில் நடத்தி வருகிறார். இதன் மூலம் வருமான வரி தாக்கல் பண்ணும் போது அதிகமான நபர்களுக்கு குறைவான கணக்கு காண்பித்து பணம் திரும்ப பெற்றுக் கொடுத்துள்ளார்.
இவர் வருமான வரி செலுத்துவதில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு ரூ 2 கோடி 84 லட்சம் திரும்ப பெற்றுக் கொடுத்ததாக புகார்கள் வந்தன.
இதனடிப்படையில் வருமான வரித்துறையினரின் புகாரின் பேரில் கடந்த 2021 ஆம் ஆண்டு பஞ்சாட்சரம் மீது மத்திய புலனாய்வுத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு பஞ்சாட்சரத்தை கைது செய்து தற்போது பிணையில் வந்துள்ளார்.

கைது

இந் நிலையில் ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு அவரது சகோதரர் பஞ்சாட்சரம் வங்கிக் கணக்கில் இருந்து ரூ12 லட்சம் பணம் அனுப்பியுள்ளார். மேலும் இருவரும் பலமுறை வங்கி பணவர்த்தனை செய்துள்ளனர். இதுகுறித்து மதுரை மத்திய புலனாய்வு துறையின் ஊழல் தடுப்பு பிரிவினர் நேற்று முன்தினம் மாலை ஆசிரியர் ராமச்சந்திரனை கைது செய்து மதுரை மத்திய புலனாய்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிபதி தமிழரசி அவரை மார்ச் 10 ம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப் பட்டார். இச் சம்பவம் ராமநாதபுரம் மாவட்ட கல்வித் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.