May 13, 2024

Seithi Saral

Tamil News Channel

பிரியாணிக்காக விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த 11 பூனைகள் நரிக்குறவர்களிடமிருந்து பறிமுதல்

1 min read

11 cats kept for sale for biryani seized from foxes

25.2..2023
ஆட்டிறைச்சியுடன் பூனைக்கறி கலந்து தயாரித்த பிரியாணி சாலையோரக்கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் கூறப்படடது. இதற்காக விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த 11 பூனைகள் நரிக்குறவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

புனைக் கறி

சென்னை சுற்றுப்புற பகுதியில் உள்ள சாலையோர பிரியாணி கடைகளில் ஆட்டு இறைச்சியுடன் பூனைக் கறியும் கலக்கப்டுவதாக விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விலங்குகள் நலஆர்வலர்கள் காவல்துறையினர் உதவியோடு சென்னை பாரிமுனை சுற்றுப்புறப் பகுதியில் உள்ள நரிக்குறவர் குடியிருப்புகளில் சோதனை செய்தனர்.

அப்போது அங்கு பூனைகள் கழுத்தில் மணி கட்டப்பட்டு அலங்காரத்துடன் இருந்துள்ளது இதை அடுத்து வீடுகளில் செல்லப் பிராணிகள் வளர்க்கப்படும் பூணைகள் திருடப்பட்டு கொண்டு வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு இருந்த 11 பூனைகளை காவல்துறையினரின் உதவியோடு வன விலங்குகள் தன்னார்வலர்கள் மீட்டனர்.

இதையடுத்து அந்த மீட்கப்பட்ட 11 பூனைகளை திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகா அம்மம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் விலங்கு பாதுகாப்பு நிறுவனர் ஸ்ரீராணி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்ரீராணி மத்திய அரசு அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது விலங்குகள் பாதுகாப்பு தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு பொன்னேரியில் சோதனை செய்து அங்கு கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பல கருப்பு பூனைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
அவை பெரும்பாலானும் திருடப்பட்ட செல்லப்பிராணிகள் ஆகும் இரவு நேரங்களில் வலைகளை பயன்படுத்தி பூனைகளை பிடித்து உள்ளனர்.

ரூ. ஆயிரம்

பிடிபட்ட குற்றவாளிகள் பல்லாவரம், பொன்னேரி, பெசன்ட்நகர், அம்பத்தூர், அயனாவரம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நரிக்குறவர்கள் பூனைகளைப் பிடித்து ஒரு பூனை ரூபாய் ஆயிரத்துக்கு விற்கப்படுவதாகவும் இதில் கருப்பு பூனைகள் பிடித்து அதன் ரத்தத்தை விற்பனை செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினர்.

மேலும் மாநகரத்தின் மத்தியில் உள்ள நரிக்குறவர்களுக்கு ஆயுதத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து காவல்துறையினர் ஆலோசிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்த தனியார் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு பூனைகள் மட்டுமல்லாது மாடுகள், குதிரைகள், நாய், ஒட்டகம், கோழி, வாத்து, உள்ளிட்டவைகள் பராமரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.