March 27, 2025

Seithi Saral

Tamil News Channel

கனிம கொள்ளையால் தமிழகத்திற்கு ஏற்பாடும் இழப்புகள் விவரம்- ரவிஅருணன் வெளியிட்டார்

1 min read

Ravi Arunan published the details of losses due to mineral looting in Tamil Nadu

28.2.2023
கனிம வளங்கள் கொள்ளையால் தமிழகத்திற்கு ஏற்பாடும் இழப்புகள் விவரங்களை முன்னாள் எம்எல்ஏ கே.ரவிஅருணன் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

ரவி அருணன் புகார்

தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு நாள்தோறும் நடத்தப்படுகிற கனிமவள கொள்ளை பற்றி முன்னாள் தென்காசி அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ரவி அருணன் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

கனிம கொள்ளை

தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு செங்கோட்டை புளியரை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கொள்ளை நடைபெறுவது நாடறிந்த ஒன்று . இதை ஏன் கனிமவளக் கொள்ளை என்று குறிப்பிடுகிறோம் என்றால் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக பாரம் ஏற்றிக்கொண்டு அதனால் தினமும் தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி வரும் செயலை கொள்ளை என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல ?
அரசும் இந்த கொள்ளையை கண்டும் காணாமல் இருப்பது வேதனையளிக்கும் ஒரு விஷயம் என்றாலும் எப்படி தமிழ்நாடு அரசுக்கு இழப்பு என்பது குறித்த ஒரு புள்ளி விவரத்தை இப்போது பார்ப்போம்.

தற்போது கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் 8 சக்கரங்களைக் கொண்ட ஒரு வாகனத்தில் மட்டும் எவ்வளவு கனிம வளம் கொள்ளை போவது என்பதை விளக்க கடமைப்பட்டுள்ளேன் பதினாறு சக்கரங்களை கொண்ட ஒரு வாகனத்தின் கொள்ளளவு 10 யூனிட் ஆகும். ஆனால் அந்த வாகனத்தை 13 யூனிட் பாரம் ஏற்றும் அளவிற்கு சட்டவிரோதமாக வடிவமைத்துள்ளார்கள் .

அந்த வாகனத்தில் அரசால் அனுமதிக்கப்பட்ட எடை லாரி எடையுடன் சேர்த்து 32 டன் ஆகும். ஒரு யூனிட் கனிம வளத்தின் எடை சுமார் 4.5 டன் ஆகும் ஆனால் அந்த வாகனத்தில் 13 யூனிட் அதாவது 60 டன் வரை கனிம வளங்கள் ஏற்றப்படுகிறது . காலி லாரியின் எடை 16 டன் ஆகும் ஆக மொத்தம் அந்தக் லாரி 75 டன் எடையுடன் சாலையில் செல்ல அனுமதிக்கின்றனர்.
மோட்டார் வாகன சட்டத்தை மீறி சாலையில் பொதுமக்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செல்ல அனுமதிக்கின்றனர்.
இது கிட்டத்தட்ட இரு மடங்கு எடை என்று சொல்லாம் ஒரு லாரியில் ஏற்றப்படும் 13 யூனிட்டின் மொத்த மதிப்பு கேரள மாநிலத்தில் 1,82,000 ஒரு லட்சத்து எண்பத்தி இரண்டாயிரம் ரூபாய் ஆகும். இந்த கணக்கின் படி தமிழ்நாட்டில் இலிருந்து தினசரி 6 ஆயிரம் வாகனங்கள் மூலம் சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேலான மதிப்புள்ள கனிமங்கள் வெளி மாநிலங்களுக்குகொண்டு செல்லப்படுகிறது .

மூன்று யூனிட் பாஸ் பெற்றுக் கொண்டு 13 யூனிட் வரை கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது . ஒரு யூனிட் கனிம வளம் கொண்டு செல்ல அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் 212 ரூபாய் . இந்த வகையில் மூன்று யூனிட்டுக்கு ரூபாய் மட்டுமே செலுத்தப்படுகிறது . மீதமுள்ள 10 யூனிட்டுக்கு செலுத்தப்பட வேண்டிய தொகை 6,360 ரூபாய் அரசுக்கு செலுத்தப்படாமல் மோசடியாக கொண்டு செல்லப்படுகிறது .
மேலும் இதற்கு அபராதம் விதித்தால் 3 யூனிட் பாஸ் போட்டுக்கொண்டு அளவுக்கு அதிகமாக ஏற்றிய 10 யூனிட்டுகள் கனிம வளங்களை லாரியில் இருந்து இறக்கி டிரைவர் மற்றும் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்வதோடு அதிகமாக ஏற்றிய கனிமங்களை பறிமுதல் செய்து மீண்டும் எந்த இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமோ அந்த இடத்தில் கொண்டு போகும் செலவையும் அவர்களிடம் வசூலிக்க வேண்டும்.
இது ஒரு புறம் இருக்க தற்போது மாதத்தில் ஏதாவது ஒரு லாரியை மட்டும் ( மாமூல் கொடுக்காத ) பிடித்துக் கொண்டு ஓவர் லோடு அபராதம் மட்டும் விதித்து அதிகமாக ஏற்றிய 10 யூனிட் கனிம வளத்தை மீண்டும் லாரியில் ஏற்றி பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படும் வகையில் சாலையில் கையூட்டு பெற்றுக் கொண்டு பயணிக்க அனுமதிக்கின்றனர் .

அபாரதம்

இதை தகவல் அறியும் சட்டம் மூலம் தகவல் கேட்டாலே அவர்கள் செய்கிற ஊழல் வெளிப்படும். ஆக ஒரு லாரிக்கு மட்டும் ரூ. 20,000 அபராதமும் கூடுதலாக ஏற்றிய 3b டன்கள் ஏற்றிய லாரிக்கு டன் ஒன்றுக்கு 2000 ரூபாய் வீதமும் மொத்தம் 92 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட வேண்டும். ஒரு வாகனத்தின் மூலம் அரசுக்கு வர வேண்டிய அபராத தொகை 92 ஆயிரம் ரூபாய் தினசரி தமிழகத்திலிருந்து செல்லக்கூடிய 6000 வாகனங்களுக்கும் இப்படி முறையாக அபராதம் விதித்தால் 55 கோடியே 20 லட்சம் ரூபாய் தினமும் அரசுக்கு வருவாயாக கிடைக்கும்
இதே போல் ஒவ்வொரு குவாரிகளிலும் முறைகேடாக நான்கு மடங்கு இவ்வாறு பாஸ் போடாமல் கனிமங்கள் தோண்டப்படுவதை ஆய்வு செய்ய உத்தரவிட்டாலே பல்லாயிரம் கோடி ரூபாய் அபராதம் மூலம் கிடைக்கும் என்னுடைய குற்றச்சாட்டு உண்மை இல்லை என்று அதிகாரிகள் மறுத்தால் அதை உண்மை என்று நேரில் நிரூபிக்க தயாராக உள்ளேன்.

தென்காசி இயற்கை வள பாதுகாப்பு சங்கம் தலைவர் என்ற முறையிலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் மக்கள் வரிப்பணத்தில் மாதா மாதம் ஓய்வூதியம் வாங்கும் நபர் என்ற முறையிலும் தினசரி அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை வெளிக்கொண்டு வர விரும்புகிறேன்.

மக்கள் வரிப்பணத்தில் மாத மாதம் ஊதியம் வாங்கும் அரசு அதிகாரிகள் அரசுக்கு ஏற்படும் இந்த வருவாய் இழப்பை தடுக்கவும் அவர்களுடைய வருங்கால சந்ததியினருக்கு கனிம கனிம வளங்கள் தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுப்பார்களா
இவ்வாறு தென்காசி மற்றும் அம்பாசமுத்திரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தென்காசி மாவட்ட இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் தலைவருமான கே . ரவி அருணன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.