July 31, 2026

Seithi Saral

Tamil News Channel

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அபார வெற்றி

1 min read

Erode East Constituency by-election Congress candidate EVKS Elangovan won

2.3.2023
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அபார வெற்றி பெற்றார்.

இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ந் தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதனை எடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த செவ்வாயக்கிழமை நடந்தது.
இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி தலைமையில் உள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளராக முன்னாள் ஒன்றிய மந்திரி ஈ. வி. கே. எஸ் இளங்கோவன் போட்டியிட்டார். இவர் மறைந்த திருமகன் ஈவெரா வின் தந்தையாவார்.
அதிமுக சார்பில் கே .எஸ் .தென்னரசு போட்டியிட்டார். தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேட்சைகள் என 77 பேர் போட்டியிட்டனர்.

வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 11ஆயிரத்து 25 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 25 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 பேர் உள்ளனர்.இவர்கள் வாக்களிக்கும் வகையில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. ராஜாஜி புரத்தில் உள்ள ஒரு வாக்கு சாவடி மையத்தில் மட்டும் இரவு 9:30 மணி வரை டோக்கன் வழங்கப்பட்டு பொதுமக்கள் வாக்களித்தனர்.
இந்த தேர்தலில் 82,138 ஆண் வாக்காளர்கள், 88, 037 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலத்தினர் 17 பேர் என மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்தனர். தேர்தலில் மொத்தம் 74.79 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

பாதுகாப்பு

வாக்குப்பதி முடிந்ததும் மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் அனைத்தும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டு வாக்கு என்னும் மையமான சித்தோடு ஐ ஆர் டி டி பொறியியல் கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டது. அங்கு பாதுகாப்பான அறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

வாக்குப்பதிவு எந்திரங்கள் அறை உள்ளேயும் வெளியேயும், அதன் சுற்றுவட்டார பகுதி என 48 இடங்களில் சிசிடி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் வாக்கு இன்னும் மையத்தில் போலீசார் துணை ராணுவத்தினர் என 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 தீயணைப்பு வாகனங்களுடன் 40 தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் இருந்தனனர்.

வாக்கு எண்ணிக்கை

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த தேர்தலில் 16 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்காக கீழ்த்தரையிலும், முதல் தளத்திலும் 2 அறைகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. கீழ்த்தரையில் 10 மேஜைகளிலும் முதல் தளத்தில் 6 மேஜைகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
மொத்தம் 15 சுற்றுகள் எண்ணப்பட்டது. ஒரு மேஜையில் இரண்டு அலுவலர்கள் ஒரு நுண் பார்வையாளர்கள் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட்டார்கள். ஒவ்வொரு மேஜையிலும் 77 வேட்பாளர்களின் முகவர்கள் இருந்தனர். அந்த வகையில் 1200க்கும் மேற்பட்ட முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட்டனா.
முகவர்கள் அனைவரும் சித்தோடு ஐ ஆர் டி டி பொறியியல் கல்லூரி நுழைவாயிலில் தீவிர சோதனை செய்யப்பட்டனர்.

வெற்றி

முதலில் தபால் ஓட்டுகள் பிரித்து எண்ண படுகிறது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்கு பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் ஒவ்வொரு சுற்று வாரியாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. மதியத்திற்கு பிறகு முன்னணி நிலவரம் தெரியவரும். மாலை முடிவுகள் வெளியாகும்.

வாக்கு எண்ணிக்கையில் இளங்கோவல் 25 ஆயிரத்துக்கு்ம் அதிகமான வாக்கு வித்தியாசத்தில முன்னணியில் இருந்தார். இறுதியில் வெற்றி பெறும் நிலையில் உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *