June 20, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் மாசித்திருவிழா தேரோட்டம்

1 min read

Tenkasi Kashi Viswanatha Swamy Temple Masithiru Vijah Chariot

5.3.2023
தென்காசியில் காசி விசுவநாத சுவாமி கோவில் மாசித்திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடந்தது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான காசி விசுவநாத சுவாமி கோவில் மாசி மக பெருந்திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகளுடன் ஒவ்வொரு சமுதாயத்தின் சார்பில் மண்டகப்படி திருவிழாக்கள் நடைபெற்று வந்தன.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரொட்டம் இன்று காலை தொடங்கியது. சுவாமி மற்றும் அம்பாள் தேர் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் பக்தர்களின் கோஷங்கள் முழங்க தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
முதல்லில் காசி சாமி தேர்நிலையை வந்தடைந்தது. அதன்பின் அம்பாள் தேர் நிலையை அடைந்தது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் மோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. நான்கு வீதிகளிலும் உலா வந்த தேர்களுக்கு மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் பக்தி பரவசத்துடன் நெய்வேத்திய பொருட்களை வழங்கி சுவாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணிக்கு தென்காசி மாவட்ட போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *