திருப்பதியில் செப்டம்பர் மாத தரிசன டிக்கெட்டுகள் 22-ந்தேதி வெளியீடு
1 min read
Tirupati darshan tickets for September to be released on the 22nd.
20.6.2026
திருப்பதி தரிசன டிக்கெட்டுகள் முன்கூட்டியே ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகின்றன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் முன்கூட்டியே ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், செப்டம்பர் மாதத்திற்கான சிறப்பு நுழைவு தரிசனம், அறை முன்பதிவு மற்றும் பல்வேறு ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்டுகள் வருகிற 22-ந்தேதி பல்வேறு கட்டங்களாக வெளியிடப்பட உள்ளன. டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஆதார் அட்டை, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களுடன் https:http://ttdevasthanams.ap.gov.in இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
புரட்டாசி மாதத்தை முன்னிட்டு செப்டம்பர் மாதத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், முன்கூட்டியே டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.