August 15, 2026

Seithi Saral

Tamil News Channel

புளியங்குடி: கணவர் 2வது திருமணம் செய்ய முயன்றதால் குழந்தையுடன் பெண் தர்ணா

1 min read

Puliyangudi: Woman stages sit-in protest with child after husband attempts to marry a second time.

20.6.2026
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கணவர் இரண்டாவது திருமணம் செய்ய முயற்சி செய்த நிலையில் காதல் திருமணம் செய்த பெண் வழக்கறிஞர் கணவரின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம், புளியங்குடி மேல மந்தை தெருவை சேர்ந்தவர் நாகராஜ் இவரது மகள் மஞ்சு பிரியா (வயது 24). இவர் கடந்த 2024ம் ஆண்டு சென்னையில் சட்டப்படிப்பு படித்து வந்தார். இதுபோல் புளியங்குடி
ஜின்னா நகரை சேர்ந்த ஜெய்னுலாதீன் மகன் முகம்மது இத்ரிஸ் (வயது 28) என்பவர் சென்னையில் செல்போன் கடையில் மேலாளராக பணியாற்றி வந்தார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நெருங்கி பழகி வந்தனர். இதையடுத்து இருவரும் கடந்த 2024ம் ஆண்டு புளியங்குடி ஜமாத்தார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

இதற்காக மஞ்சு பிரியா மதம் மாறி தனது பெயரை தன்ஷீலா என்று மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு தற்போது ஒன்றரை வயது குழந்தை உள்ளது. இதனிடையே தன்ஷீலா வை அவரது கணவர் குடும்பத்தார் ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் காதல் கணவருக்கு அவரது பெற்றோர், வேறு பெண்ணை திருமணம் செய்து வைக்க முயற்சி செய்தனர். இதையொட்டி முகம்மது இத்ரிஸ், கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னையில் இருந்து புளியங்குடி வந்தார். அவருக்கு 2வது திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தது தெரியவந்துள்ளது.

எனவே தன்ஷீலா தனது கைக் குழந்தையுடன் புளியங்குடியில் உள்ள காதல் கணவர் முகம்மது இத்ரிஸ் வீட்டுமுன் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஆளால் கணவர் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் தன்ஷீலா மற் றும் அவரது குழந்தையை ஏற்க மறுத்து அங்கிருந்து வலுக்கட்டாயமாக அவரை வெளியேற்றினர். இதனால் 2வது திருமணம் தடைபட்டது. இதையடுத்து முகம்மது இத்ரிஸ் சென்னைக்கு சென்றுவிட்டார்.

இதையடுத்து கணவர் வீட்டார் ஏற்க மறுத்தது குறித்து தன்ஷீலா மற்றும் அவரது குடும்பத்தினர் ஜமாத்தில் முறையிட்டனர். அவர்கள், நீதிமன்றம் மூலம் தீர்வு காணுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து மனைவி மற்றும் குழந்தையை ஏற்க மறுத்து 2வது திருமணம் செய்ய முயன்ற முகம்மது இத்ரிஸ் மற்றும் குடும்பத்தினர் மீது தன்ஷீலா புளியங்குடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் இந்திரா வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

வழக்கறிஞர் தன்ஷீலா கணவர் வீட்டு முன் குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ தற் போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *