“அண்ணாவின் லட்சியங்களை நிறைவேற்றுவோம்” – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘டுவிட்டர்’ பதிவு
1 min read
“Let’s fulfill Anna’s ambitions” – Prime Minister M.K.Stal’s ‘Twitter’ post
6/3/2023
“அண்ணாவின் லட்சியங்களை நிறைவேற்றுவோம்” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘டுவிட்டர்’ பதிவு போட்டுள்ளார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
அண்ணா
நாம் செல்லுகிற திராவிட மாடல் பாதைக்கு பேரறிஞர் அண்ணா அடித்தளமிட்ட நாள் இன்று. ‘ஏ தாழ்ந்த தமிழகமே’, என தட்டியெழுப்பி, தமிழ்நாட்டை தலைநிமிர வைத்த பேரறிஞர் அண்ணா, வெறும் பெயரல்ல. தமிழர் பெற்ற உணர்வு. அண்ணாவின் லட்சியங்களை நிறைவேற்ற பாடுபடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த பதிவுடன் தமிழக முதல்-அமைச்சராக அண்ணா பதவியேற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
திமுக நிறுவனரான சி.என். அண்ணாதுரை, தமிழகத்தின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற நாள் இன்று. கடந்த 1967ம் ஆண்டு மார்ச் 6 அன்று சி.என். அண்ணாதுரை முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு அப்போதைய கவர்னர் உஜ்ஜல் சிங் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.