கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை
1 min read
Three members of the same family die by suicide after consuming poison in Kerala
1.11.2026
கேரளம் மாநிலம் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரியை சேர்ந்தவர் சஜூ ஆன்றனி (வயது 64). இவரது மனைவி அனு( 59). இந்த தம்பதிக்கு சவின் (33) என்ற மகன் இருந்தான். இவர்கள் 3 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். மளிகை கடை ஒன்றை நடத்தி வந்த சஜூ ஆன்றனி அதில் நஷ்டமானதால் கடையை மூடி விட்டார். இந்த நிலையில், சம்பவத்தன்று காலை சஜூ ஆன்றனியின் வீடு பூட்டி கிடப்பதை கண்ட உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவருக்கு போன் செய்து பார்த்தனர். ஆனால் பதில் இல்லாததால் அவர்கள் சுங்கனாச்சேரி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சஜூ ஆன்றனி உள்பட 3 பேரும் விஷம் குடித்த நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவர்களின் உடல்களை போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். கடன் தொல்லை காரணமாக 3 பேரும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.