திமுக ஆட்சியை அகற்ற சதி – முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு
1 min read
Conspiracy to topple DMK government – First Minister M. K. Stalin’s sensational allegation
7.3.2023
சிலர் கலவரத்தை ஏற்படுத்தி தி.மு.க. ஆட்சியை அகற்ற சதி செய்து வருவதாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கருணாநிதி சிலை
நாகர்கோவிலில் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி முழு உருவ சிலை திறப்பு விழாவில் பேசிய அவர் கூறியதாவது:-
சாதி கலவரம் , மத கலவரத்தை தூண்டலாமா என சிலர் முயற்சி செய்து வருகின்றனர். நாட்டை பிளவுபடுத்த சிலர் முயற்சி செய்து வருகிறார்கள் . மக்களிடம் பிளவுகளை ஏற்படுத்தலாமா என சிலர் திட்டமிட்டு காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களை விளம்பரப்படுத்த அவர்கள் நம் மீது விமர்சனத்தை வைக்கின்றனர் . நாட்டைக் காப்பற்ற வேண்டும் என்றால், மதச்சார்பற்ற தலைவர்கள் ஒன்று சேர்ந்து தேர்தல் களத்தில் நிற்க வேண்டும் என்று கூறி வருகிறேன். அதை நீங்கள் செய்தால், மக்களை மட்டுமல்லாமல், இந்தியாவையும் காப்பாற்ற முடியும். உங்களிள் ஒத்துழைப்புடன் பணியை தொடர போகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.