June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

மகன்கள் பார்க்க வராததால் தம்பதி தற்கொலை

1 min read

Couple commits suicide as sons fail to visit them.

16.6.2026
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே புத்தூர் காமன் கோவில் தெருவை சேர்ந்தவர் காமராஜர், 69; விவசாயி. இவரது மனைவி வள்ளி, 59; இவர்களுக்கு சதீஷ்குமார், கார்த்திக்குமார் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் திருமணமாகி குடும்பத்துடன் சென்னையில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
வீட்டில் காமராஜ், வள்ளி மட்டும் தனியாக இருந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக காமராஜிக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவதிப்பட்ட காமராஜ் தான் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், மகன்கள வரவில்லை என்ற விரக்தியில் இருந்துள்ளார். கடந்த 13ம் தேதி இரவு வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். அதனைக் கண்டு அவரது மனைவி வள்ளியும் அந்த மருந்தை குடித்துள்ளார்.
உயிருக்கு போராடிய இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு இருவரும் உயிரிழந்தனர்.

இதுகுறித்து ஆணைக்காரன் சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *