May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழக கனிம வளங்கள் கடத்தல் பற்றி போலீசில் புகார் செய்யலாம் சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் பதில்

1 min read

Minister Durai Murugan replied in the Assembly that Tamil Nadu can complain to the police about smuggling of mineral resources

31.3.2023
தமிழக கனிம வளங்கள் கடத்தல் பற்றி சட்டசபையில் கடையநல்லூர் எம்எல்ஏ புகாருக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.

கனிமவள கடத்தல்

தமிழக சட்டமன்றத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் உள்ளிட்ட துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
இதில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ.கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா கலந்து கொண்டு பேசியதாவது;-
கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி கேரள எல்லைப் பகுதியில் உள்ளது இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக் கான இராட்சத கனரக வாகனங்கள் மூலம் கனிம வளங்கள் சட்ட விரோதமாக கேரளாவிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த கனரக வாகனங்கள் கிராம சாலைகளில் செல்வதால் சாலைகளுக்கு அடியில் போடப்பட்டுள்ள குடிநீர் பைப் லைன் மற்றும் சாலைகள் சேதம் அடைந்து வருகிறது. இதனால் தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் தமிழக அரசு இதுவரை அதனை கண்டு கொண்டதாக தெரியவில்லை எனவே உடனடியாக தமிழ்நாடு அரசு இந்த பிரச்சனைகள் தலையிட்டு தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சட்ட விரோதமாக கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுவதை தடுப்பதோடு கனரக வாகனங்கள் கிராம சாலைகளில் புகுந்து சேதம் ஏற்படுத்துவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் மூலம் கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்தப்படுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளதா அல்லது சட்ட விரோதமாக இந்த கனிமவள கடத்தல் நடைபெறுகிறதா என்பதை தெரிவிப்பதோடு சட்ட விரோதமாக நடைபெற்று வருகிற கனிமவள கடத்தலை உடனடியாக தடுத்து நிறுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு பேசினார்.

துரை முருகன் பதில்

அதற்குப் பதிலளித்த அவை முன்னவர் துரைமுருகன் பதி்ல் அளித்து பேசும்போது கூறியதாவது:-
இதைப்போலவே பல்வேறு புகார்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வந்தது. எந்த காரணம் கொண்டும் இது போன்ற பெரிய இராட்சத கனரக வாகனங்கள் போகக்கூடாது என்பதுதான் நாங்கள் போட்டிருக்கின்ற சட்டம். எங்களையும் மீறி அதுபோன்று இராட்சத கனரக வாகனங்கள் செல்கிறது என்று சொன்னால் அங்கே காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கலாம். ஆகவே கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ.கிருஷ்ண முரளி காவல்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் காவல்துறை கடுமையான நடவடிக்கை மேற்கொள்வார்கள். இது போன்ற இராட்சத வண்டிகளை பயன்படுத்தக்கூடாது என்று நாங்களும் சொல்லி இருக்கிறோம்
இவ்வாறு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.