June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

கீழ பாட்டாக்குறிச்சி பிரம்மா திருக்கோவிலில் பிரம்மோற்சவம் விழா

1 min read

Brahmotsavam ceremony at Lower Pattakurichi Brahma temple

8/4/2024
தென்காசி தாலுகா கீழபாட்டாக்குறிச்சி கிராமத்தில் அமைந்திருக்கும் பிரம்மா திருக்கோவில் 2017 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது . இங்கு நாள் தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து பிரம்மாவை வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில் 6 ஆம் ஆண்டு ப்ரம்மோற்சவம் மற்றும் வருஷாபிஷேகம் விழா வரும் 12.04.2023(புதன்கிழமை) அன்று நடைபெற உள்ளது.
அன்று அதிகாலை 3.30 மணியளவில் பிரம்ம மகா யாகத்துடன் துவங்கி நடைபெற இருக்கிறது. காலை 6 மணிக்கு ப்ரம்ம ஆலமரம் , அரசமரம் அபிஷேகம் சிறப்பு பூஜை , 8.30 மணிக்கு ப்ரம்ம நவக்கிரஹம் அபிஷேகம் சிறப்பு பூஜை, 7 மணிக்கு பிரம்ம நாகதேவதை அபிஷேகம் சிறப்பு பூஜை, 7.30 மணிக்கு ப்ரம்ம கணபதி அபிஷேகம் சிறப்பு பூஜை, 8 மணிக்கு பிரம்ம வேல்முருகன் அபிஷேக சிறப்பு பூஜை, 8.30 மணிக்கு ப்ரம்ம சபரி ஐய்யப்பன் அபிஷேகம் சிறப்பு பூஜை ப்ரம்ம சபரி ஐயப்பன் அபிஷேகம் சிறப்பு பூஜை 9 மணிக்கு ப்ரம்ம ஆஞ்சநேயர் அபிஷேகம் சிறப்பு பூஜை , 9.30 மணிக்கு ப்ரம்ம மகா விஷ்ணு அபிஷேகம் சிறப்பு பூஜை , காலை 10.00 மணிக்கு ப்ரம்ம மகாசிவன் அபிஷேகம் சிறப்பு பூஜை, 10.30 மணிக்கு ப்ரம்ம மகா சரஸ்வதி அபிஷேகம் சிறப்பு பூஜை, 11.00 மணிக்கு ப்ரம்ம மகாலெட்சுமி அபிஷேகம் சிறப்பு பூஜை, 11.30 மணிக்கு ப்ரம்ம மகா சக்தி அபிஷேகம் சிறப்பு பூஜை, 12 மணிக்கு பஞ்சமுகப்ரம்மா அபிஷேகம் சிறப்பு பூஜை, 12.30 மணிக்கு புஷ்பாஞ்சலி , தீபாதாரணை நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
மேலும் பிரம்மா திருக்கோவில் பிரம்மோற்சவம் மற்றும் வருஷாபிஷேக விழாவினை முன்னிட்டு வருகிற 12ந் தேதிகாலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு அன்னதானம் நடைபெற உள்ளது.
மேற்கண்ட தவலை கீழப் பாட்டாக்குறிச்சி பிரம்மலோகம் பிரம்மா திருக்கோவில் நிர்வாகி பிரம்மஸ்ரீ கே.கே.சரசந்திரபோஸ் மற்றும் ஒருங்கிணைப்பாளர் கொட்டாகுளம் இசக்கி பாண்டியன் ஆகியோர் கூறினர்.

*முத்துசாமி, நிருபர், தென்காசி

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *