May 9, 2024

Seithi Saral

Tamil News Channel

பிரதமர் நரேந்திர மோடியுடன் செல்பி எடுத்துக் கொண்ட மாற்றுத்திறனாளி- நெகிழ்ச்சி

1 min read

A differently-abled person – Leschi took a selfie with Prime Minister Narendra Modi

9.4.2023-
பிரதமர் நரேந்திர மோடியுடன் செல்பி எடுத்துக் கொண்ட மாற்றுத்திறனாளி மணிகண்டன் நெகிழ்ச்சியுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக நேற்று மதியம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். அதன் பின்னர் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு சென்று சென்னை – கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ரூ.294 கோடி மதிப்பிலான திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம் பள்ளி இடையேயான 37 கிலோமீட்டர் அகல ரயில் பாதை திட்டம் இந்த பட பதிவேடு ரயில் திட்டங்களை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு 7:45 மணி அளவில் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.

மாற்றுத்திறனாளி

அப்போது அவரை வழி அனுப்பி வைக்க ஏராளமான பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் காத்திருந்தனர். அவர்களுடன் ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(30) என்பவரும் காத்திருந்தார். மாற்றுத்திறனாளியான இவர் தனது மூன்று சக்கர வாகனத்தில் காத்திருந்தார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி அவர் அருகே வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பொறுப்பாளர்களிடம் மணிகண்டன் குறித்த விவரங்களை கேட்டு அறிந்தார்.

செல்பி

பின்னர் பிரதமர் மோடி மணிகண்டன் அருகே சென்று அவரிடம் சிறிது நேரம் பேசினார். பின்னர் மணிகண்டன் உடன் பிரதமர் மோடி செல்பி எடுத்துக் கொண்டார். பின்னர் அங்கிருந்து கிளம்பி சென்றார்.இதுகுறித்து மணிகண்டன் நெகிழ்ச்சியுடன் கூறியதாவது:-
நான் ஈரோடு மாவட்டம் கிருஷ்ணம்பாளையம் ஜீவா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். நான் கடந்த 11 வருடமாக அதே பகுதியில் பெட்டி கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறேன். நான் பாரதிய ஜனதா கட்சியில் 9 வருடமாக உறுப்பினராக இருக்கிறேன். முதலில் இளைஞர் அணியில் இருந்தேன் அதன் பிறகு ஊடகப்பிரிவில் வீரப்பன்சத்திரம் பகுதி செயலாளராக இருந்தேன். தற்போது 26 -ஆவது கிளை தலைவராக இருக்கிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி நம் நாட்டிற்காக பல்வேறு திட்டங்களை தந்துள்ளார். அவரை என் வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்காகத்தான் சென்னையில் நடந்த விழாவில் பங்கேற்க சென்றேன். அப்போது சென்னை விமான நிலையத்தில் நிர்வாகிகளுடன் நானும் சென்றிருந்தேன். பிரதமர் நரேந்திர மோடி என் அருகே வந்தார். எனது பெயர். எனது குடும்ப விவரங்களை கேட்டறிந்தார். அப்போது பிரதமரிடம் நான் உங்களுடன் ஒரு செல்பி எடுக்கலாமா என்று கேட்டேன். அதற்கு உடனடியாக பிரதமர் மோடி ஒய் நாட். தாராளமாக எடுக்கலாம் என்று கூறி எனது செல்போனை வாங்கி அவரை செல்பி எடுத்துக் கொண்டார்.
பிரதமருடன் செல்பி எடுத்துக் கொண்டது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம். பிரதமர் நரேந்திர மோடி மிகவும் எளிமையான மனிதர். சாதாரண மக்களிடமும் அன்பு செலுத்துகிறார். ஒரு அண்ணன் போன்று என்னிடம் உரிமையோடு பேசினார். மேலும் எனது கட்சி பணியையும் பாராட்டினார். இந்த நிகழ்வை இப்போதும் என்னால் நம்ப முடியவில்லை. இதற்கு ஏற்பாடு செய்த தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை முதல்-அமைச்சராக வரவேண்டும் என்பது எனது ஆசை. அதற்காக நான் கடுமையாக உழைப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.