June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

கனிம வள கடத்தலை தடுக்க கோரி 3 குழந்தைகள் உண்ணாவிரதம்- பெற்றோர்கள் கைதாகி விடுதலை

1 min read

3 children on hunger strike demanding to stop mineral resource smuggling- parents arrested and released

15.4.2023
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக ராட்சத வாகனங்களில் கனிம வளங்கள் கடத்தப்படுவதை கண்டித்து கடையும் பகுதியில் 3 குழந்தைகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் அந்த குழந்தைகளின் பெற்றோர்களை கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உண்ணாவிரதம்

தென்காசி மாவட்டம் கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் இவரது மகன் எல்கேஜி படித்து வரும் அஸ்வின் சுவநாத், இவரது சகோதரர் கடையம் அருகே உள்ள கல்யாணி புரம் கிராமத்தைச் சேர்ந்த சந்திர சேகரன் என்பவரது மகள்கள் சுபப்பிரியங்கா ( வயது 10) சுபிதா(வயது9) ஆகியோர் கடையம் பகுதியில் இருந்து கேரளாவிற்கு சட்ட விரோதமாக கனிமங்கள் வளங்கள் கொண்டு செல்வதை தடுத்து நிறுத்த கோரி தமிழக முதல்வருக்கு கடிதம் மூலம் கோரிக்கை மனு அனுப்பினார்கள்.
மேலும் அந்த கடிதத்தில் இது சம்பந்தமாக சித்திரை திருநாளில் தாங்கள் பட்டினி போராட்டம் நடத்தப் போவதாகவும் அந்த கடிதத்தில் தெரிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று அஸ்வின்சுவநாத், சுபப்பிரியங்கா, சுபிதா, ஆகிய மூன்று பேர்களும் தங்களது பெற்றோர்களுடன் கடையம் பஸ்நிலையம் அருகே உள்ள சின்னத்தேர் பகுதியில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அப்போது அங்கு வந்த கடையம் காவல் நிலைய ஆய்வாளர்கள் சுரேஷ், சாந்தகுமாரி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட முயன்ற குழந்தைகளின் பெற்றோர்களான கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத், மற்றும் அவரது சகோதரர் சந்திரசேகர் மற்றும் கீழக்கடையம் மாரியப்பன் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது அந்த மூன்று குழந்தைகளும் தங்களது பெற்றோர்களை கைது செய்யக் கூடாது என்று கூறி காவலர்களை தடுத்து நிறுத்த முயன்றனர் ஆனாலும் போலீசார் குழந்தைகளின் பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் இதனால் வேறு வழி இல்லாமல் வீட்டிற்கு சென்ற அந்த மூன்று குழந்தைகளும் தங்கள் வீடுகளில் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரவி அருணன்

இது பற்றி தகவல் அறிந்த இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் தலைவரும் தென்காசி அம்பாசமுத்திரம் தொகுதிகளின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.ரவிஅருணன் இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் தென்காசி செயலாளர் புளியரை ஜமீன், தெற்கு கடையம் ஒன்றிய கவுன்சிலர் மாரிக்குமார் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் அந்த குழந்தைகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி பழரசம் கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து கடையம் காவல் நிலையம் சென்று அங்கு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் மற்றும் அவரது சகோதரர் சந்திரசேகர் ஆகியோரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி பழரசம் கொடுத்து உண்ணாவிரத முடித்து வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து போலீசாரால் கைது செய்யப்பட்ட இருவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர் இந்த சம்பவம் கடையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *