June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

திருவள்ளூர் அருகே 50 அடி ஆழ கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய புள்ளி மான் மீட்பு

1 min read

Spotted deer that fell into a 50 feet deep well near Tiruvallur and fought for its life was rescued

15.4.2023
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி காப்புகாட்டில் அதிக அளவில் மான்கள் இருந்து வருகின்றன. காட்டுப்பகுதியில் உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்படும் போது, மான்கள் காட்டை விட்டு வெளியேறி சுற்றியுள்ள கிராம பகுதியில் சுற்றி திரிவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் புள்ளி மான் ஒன்று தண்ணீரை தேடி காட்டை விட்டு வெளியேறி பூண்டி அடுத்த விளாப்பாக்கம் கிராமத்தில் புகுந்தது.

அப்போது அங்கு 50 அடி ஆழமுள்ள தடுப்பு சுவர் இல்லாத விவசாய கிணற்றில் புள்ளி மான் தவறி விழுந்தது. கிணற்றில் 3 அடி தண்ணீர் மட்டுமே இருந்ததால் கிணற்றில் விழுந்த புள்ளி மான் உயிருக்கு போராடி வந்தது.

மீட்பு

இது குறித்து, அந்த பகுதி பொதுமக்கள் திருவள்ளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் அடிப்படையில் தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி, புள்ளி மானை கிணற்றில் இருந்து பத்திரமாக உயிருடன் மீட்டு திருவள்ளூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனை அடுத்து வனத்துறையினர் மானை பூண்டி காப்புக்காட்டு பகுதியில் விட்டது தொடர்ந்து மான் துள்ளி குதித்து காட்டு பகுதிக்கு ஓடியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *