June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

குருப்பெயர்ச்சி பலன்கள் 2023-கன்னி

1 min read

Guru peyarchi Palankal 2023/ Kanni/Virgin

பிறரிடம் நல் அன்பை வெளிப்படுத்தும் கன்னி ராசி அன்பர்களே! நீங்கள் மென்மையான குணம் கொண்டவர்கள். உங்களது பண்பும், பணிவும், நேர்மையும் எல்லோரையும் மிக எளிதில் கவரும். இது வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்து கொண்டிருந்தார்.உங்கள் செல்வாக்கு உயர்ந்திரு- க்கும். நினைத்ததை நிறைவேற்றி இருப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரித்திருக்கும். தேவைகள் பூர்த்தியாகி இருக்கும்.பொருளாதார வளம் மேம்பட்டிருக்கும். வீடு,மனை வாங்கி இருப்பீர்கள். அல்லது வசதியான வீட்டிற்கு குடிபுகுந்து இருப்பீர்கள். சிலர் வாகனம் வாங்கி இருக்கலாம். இந்த நிலையில் இப்போது குரு 8-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. 8-ம் இடத்தில் இருக்கும் குருபகவான் பொதுவாக மன வேதனையும், நிலையற்ற தன்மைûயும் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண் விரோதத்தை உருவாக்குவார். பல்வேறு தொல்லைகளை கொடுப்பார் என்பது பொதுவான ஜோதிட வாக்கு. ஆனால் இதனை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்து பார்வைக்கு தனி சக்தி உண்டு. அந்த பார்வை உங்களுக்கு சாதகமாக உள்ளது. குருவின் பார்வையால் கோடி நன்மைகளை அடையலாம் என்பது ஜோதிட வாக்கு. அந்த வகையில் உங்களுக்கு எந்த இடையூறுகள் வந்தாலும் அதை குருவின் பார்வை முறியடித்து வெற்றிக்கு வழிவகுக்கும். எனவே குரு சாதகமற்ற நிலையில் இருக்கிறாரே என்று நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்.காரணம் 11-9-2023 முதல் 4-12-2023 வரை வக்கிரம் அடைகிறார். அவர் வக்கிரத்தில் சிக்கும் போது கெடுபலனை தரமாட்டார் மாறாக நன்மையே தருவார். குருபகவான் வக்கிரம் அடைந்தாலும், அதாவது பின்னோக்கி நகர்ந்தாலும் மேஷ ராசிக்குள்ளேயே இருக்கிறார்.
மற்றகிரகங்களின் நிலை
கோச்சார பலனை கணிக்கும் போது மற்ற கிரகங்களின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். முக்கிய கிரகங்களில் ஒன்றான சனிபகவான் தற்போது 5-ம் இடமான மகர ராசியில் உள்ளார். இது சிறப்பான இடம் அல்ல. 5-ல் சனி இருக்கும் போது மனைவி, மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை உருவாக்கிஇருக்கலாம். மனதில் ஏனோ இனம் புரியாத வேதனை குடி கொண்டிருக்கும். குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகளை தந்திருப்பார். அவர் திருப்தியற்ற நிலையில் இருந்தாலும்அவரது 7-ம் இடத்து பார்வை சிறப்பாக உள்ளன. இதனால் நன்மைகள் கிடைத்திருக்கும். இந்த நிலையில்தான் 20-12-2023 அன்று சனி பகவான் கும்ப ராசிக்கு அடியெடுத்து வைக்கிறார். இங்கு நல்ல பணப் புழக்கத்தையும், காரியத்தில் வெற்றியையும் கொடுப்பார். அபார ஆற்றல் பிறக்கும். எதிரிகளை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்குவீர். மேலும் சனியின் 10-ம் இடத்துப்பார்வையும் சிறப்பாக அமையும். அதன் மூலம் அவர் பொருளாதார வளத்தையும், காரிய அனுகூலத்தையும் தருவார். தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார்.
நிழல் கிரகமான ராகு தற்போது 8-ம் இடமான மேஷத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. அவர் உறவினர்கள் வகையில் சிற்சில பிரச்சினைகளை உருவாக்- கலாம். சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும்.உங்கள் முயற்சிகளில் தடைகளையும் உருவாக்கலாம். அவர் 8-10-2023 அன்று 7-ம் இடமான மீனத்திற்கு வருகிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. இங்கு அவரால் இடப் பெயர்ச்சியையும், அவப்பெயரையும் சந்திக்க நேரலாம். சிலர் கெட்டவர்களோடு சேரும் சூழ்நிலை உருவாகும் யாரிடமும் கவனமாக பழகவேண்டும்.
ராகுவுக்கு இணையான நிழல் கிரகமான கேது கேது 2-ம் இடமான துலாம் ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. அவரால் நன்மை தர இயலாது.. அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. அரசின் வகையில் சிக்கல் வரலாம். கேது சாதகமற்ற இடத்தில் இருக்கிறார் என்று கவலைகொள்ள தேவை இல்லை காரணம் அவரது பின்னோக்கிய 4-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 11-ம் இடமான கடகத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். மகிழ்ச்சி அதிகரிக்கும். அவர் 8-10-2023 அன்று உங்கள் ராசிக்கு வருகிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனால் பழைய கெடுபலன்கள் இனி இருக்காது. அவர் சிறுசிறு தடையையும், உடல் உபாதையையும் தரலாம்.அதற்காக கவலை கொள்ள வேண்டாம். காரணம் கேதுவின் பின்னோக்கிய 11-ம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு 3-இடமான விருச்சிக ராசியில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதனால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். தெய்வ அனுகூலம் கிடைக்கும். பொருளாதார வளம் மேம்படும்.
மேற்கண்ட கிரகங்களின் நிலையை கொண்டு விரிவான பலனை காணலாம்.
முக்கிய கிரகங்கள் எதுவும் சாதகமாக இல்லாத காலக்கட்டம். எடுத்த காரியத்தில் அவ்வப்போது தடைகள் வரும். அதை சற்று முயற்சி எடுத்து முறியடித்து வெற்றி காண்பீர்கள். பண வரவுக்கு தகுந்தாற்போல் செலவும் இருக்கும். வீண் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். சுபநிகழ்ச்சிகள் தாமதம் ஆகலாம். பொருட்கள் திருட்டு போக வாய்ப்பு உண்டு. இருப்பினும் குரு,சனிபகவானின் பார்வை பலத்தால் சிறப்பான பணப்புழக்கம் இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். .குருவின் பார்வையால் இதுவரை இருந்த மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். சனி பகவானின்7-ம் இடத்துப் பார்வையால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர்.
குடும்பத்தில்இதுவரைஇருந்து வந்த இருக்கமான நிலை மாறும். பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். சகோதரிகள் மூலம் உதவி கிடைக்கும்.உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.
தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். மேல் அதிகாரி -களிடம் அனுசரணையுடன் நடந்து கொள்ளவும். குருவின் பார்வையால் இடையூறுகளை எளிதில் முறியடிப்பீர்கள். நல்ல பலனையும் கிடைக்க பெறுலாம். அரசு ஊழியர்கள் வேலையில் கவனமாக இருக்கவும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
ஆசிரியர்கள் சீரான நிலையில் இருப்பர். வேலைப்பளு இருந்தாலும் மன நிம்மதி இருக்கும். மருத்துவர்களுக்கு உங்கள் திறமை பளிச்சிடும். .வக்கீல்களுக்கு சனிபகவானின் பார்வையால் வழக்குகள் சிறப்பாக இருக்கும்.
வியாபாரத்தில் நம்பிக்கையுள்ள நண்பர்கள், பெரியோர்கள் ஆலோசனையுடன் முன்னேற்றம் காணலாம். அச்சகம், பத்திரிகை, பப்ளிகேசன், கட்டுமான ஆலோசகர் போன்ற தொழில் நல்ல வளர்ச்சியை அடையும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். அலைச்சல் அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.
மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையை கேட்பது நல்லது. சிலர் வீண் மன வேதனையால் கல்வியில் நாட்டம் இல்லாமல் போகலாம்.
விவசாயிகள்: அதிகமாக உழைக்க வேண்டும். பயறுவகைகள், துவரை, சோளம், தக்காளி, பழவகை -கள் மூலம் நல்ல வருவாய் காணலாம்.
பெண்கள் நல்ல வசதியோடு காணப்படுவர். சுற்றுலா, விருந்து, விழா என சென்று வருவீர்கள். புதிய நகை, ஆடைகள் போன்றவை கிடைக்கும். சிலருக்கு பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வந்து சேரும்.உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். கவனம் தேவை.வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதில் தடை ஏதும் இல்லை. சுயதொழில் செய்து வரும் பெண்களுக்கு சகோதரர் -களின் ஆதரவு இருக்கும். அவர்களால் பொருள் சேரும்.
உடல்நலம்: சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். வாயு தொடர்பான உபாதை வரலாம்.
பரிகாரம்- விநாயகர்,ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல தவறாதீர்கள். பத்திரகாளியம்மனை வழிபட்டு வாருங்கள். ராகுவுக்கு நீல நிறவஸ்திரத்தை சாத்தி அர்ச்சனை செய்யுங்கள். ஏழைகளுக்கு உளுந்து தானம் செய்யுங்கள்.
செப்டம்பர் மாதத்திற்கு பிறகு
ராகுவால் இடப்பெயர்ச்சியையும், அவப்பெயரையும் சந்திக்க நேரலாம். சிலர் கெட்டவர்களோடு சேர சூழ்நிலை உருவாகும். யாரிடமும் கவனமாக பழகவேண்டும் கேது காரிய தடையையும், உடல் உபாதையையும் தரலாம். குரு சாதகமாக இல்லை என்பதனால் சிற்சில தடைகள் வரத்தான் செய்யும். அதை சனிபகவானால் சாமர்த்தியமாக முறியடிப்பீர் -கள். டிசம்பர் 20-ந் தேதிக்கு பிறகு அவரால் அனுகூலம் ஏற்படும். பணவிரயம் மறைந்து பொருளாதாரத்தில் ஒருபடி மேலோங்கலாம். தடைகள் அனைத்தும் விலகும். இதனால் ஆனந்தமும் நிலைக்கும். வாகன சுகம் கிடைக்கும்.
குடும்பம்: மனதில் வருத்தம் உருவாகும். வீண் அலைச்சல் ஏற்படும் சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். வீட்டினுள் சிற்சில பிரச்சினை வரலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும்.ஆனால் குருவின்பார்வையால் நற்பலனை தருவார். இதனால் வளத்தை அதிகரிக்க செய்வார். சகோதரிகளால் பொருள் சேரும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். டிசம்பர் 20-ந் தேதிக்கு பிறகு உங்கள் ஆற்றல் மேம்படும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். காரிய அனுகூலம் எளிதாகும்.
உத்தியோகம்சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். குருவின் 7-ம் இடத்துப் பார்வையால் மேல் அதிகாரிகளிடம் அனுசரணையாக நடந்து கொள்ள -வும். வழக்கமான பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றுக்கு தடையில்லை. உங்களை புரிந்து- கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். ஆசிரியர்கள் முயற்சி எடுத்தால் கோரிக்கைகள் நிறைவேறும். ஆனாலும் குருவின் பார்வையால் திறமைக்கு ஏற்ற கவுரவம் கிடைக்கும். கேதுவின் பார்வையால் பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம்.
டிசம்பர் 20-ந் தேதிக்கு பிறகு வக்கீல்களுக்கு வழக்கு, விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். மருத்துவர்கள் சிறப்பான பலனை எதிர் நோக்கலாம்.உங்கள்அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும் வெளியூர் வாசம் நிகழும். தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். கவனம் தேவை. கேதுவின் பார்வையால் போட்டியாளர்கள் வகையில் இருந்து வந்த இடையூறு, அரசு வகையில் இருந்து வந்த அனுகூலமற்ற போக்கு முதலியன மறையும். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். டிசம்பர் 20-ந் தேதிக்கு பிறகு சனிபகவானால் தொழில் சிறப்படையும். புதிய தொழில் அனுகூலத்தைத்தரும். லாபம் அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
கலைஞர்களுக்கு 11-9-2023 முதல் 4-12-2023 வரை புகழ், பாராட்டு வந்து சேரும். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும். சிலர் கெட்ட சகவாசத்திற்கு வழிவகுக்கலாம். கவனம் தேவை. ஆனால் டிசம்பர் 20-ந் தேதிக்கு பிறகு அவர்கள் எதிர்பார்த்த பதவி கிடைக்கும். பணப் புழக்கத்தில் எந்த குறையும் இருக்காது.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படித்தால்தான் பலன் கிடைக்கும். இருப்பினும் குருவின் பார்வை- யால் ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும்.
விவசாயிகள்: அதிகமாக உழைக்க வேண்டும். டிசம்பர் 20-ந் தேதிக்கு பிறகு வருமானத்திற்கு குறை இருக்காது. பாசிபயறு நெல், எள், கொள்ளு, கொண்டைக்கடலை, சோளம்,மஞ்சள், பழ வகைகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். பண்ணை தொழில் கால்நடை செல்வம் பெருகும். பசுவளர்ப்பிலும் போதிய வருவாயை பெறலாம்.புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வழக்கு, விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள் பொதுவாக எந்த பிரச்சினையிலும் விட்டுக்கொடுத்து போகவும். குருவின் 7-ம் இடத்து பார்வையால் பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். கேதுவின் பார்வையால் தெய்வ அனுகூலம் கிடைக்கும். புனித ஸ்தலங்- களுக்கு சென்று வருவீர்கள்.பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர்.11-9-2023 முதல் 4-12-2023 தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். வாழ்க்கையில் ஆனந்தம் அதிகரிக்கும். தோழிகள் அனுசரணை- யுடன் இருப்பர்.வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
உடல் நலம் சிறுசிறு உபாதைகள் வரலாம். டிசம்பர் 20-ந் தேதிக்கு பிறகு ஆரோக்கியம் மேம்படும்.
பரிகாரம்: பாம்பு புற்றுள்ள கோவிலுக்கு சென்று பால் ஊற்றுங்கள். இதனால் நன்மைகள் மேலும் அதிகரிக்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை மற்றும் பைரவருக்கு பூஜை செய்யலாம். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *