August 1, 2026

Seithi Saral

Tamil News Channel

12 மணி நேர வேலை நேரம் சட்டம்: தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் 24-ந்தேதி அமைச்சர்கள் ஆலோசனை

1 min read

12-hour working hours law: 24-day ministerial consultation with trade union representatives

22.4.2023
12 மணி நேர வேலை நேரம் சட்டம் குறித்து தொழிலாளர் சங்கங்கள் சில கருத்துக்களை தெரிவித்து வருவதால் வருகிற 24-ந்தேதி ஆலோசனை நடைபெறுகிறது.
12 மணி நேர வேலை

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. சென்னை: தமிழக சட்டசபையில், “2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்த) சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட முன்வடிவினுடைய முக்கிய அம்சங்கள் குறித்தும், ஒன்றிய அரசின் தொழிலாளர் நல சட்டத்தில் இருந்து, தற்போது தமிழ்நாடு அரசு முன்மொழிந்து இருக்கும் இந்தச் சட்டம் எவ்வாறு வேறுபட்டு உள்ளது என்பதை விளக்கிக் கூறி, இந்த திருத்தத்தால் தமிழ்நாட்டிற்குக் கூடுதலாக வரக்கூடிய முதலீடுகள் மற்றும் பெருகும் வேலைவாய்ப்புகள் குறித்தும் சட்டமன்றத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
இருப்பினும், இந்த மசோதா குறித்து தொழிலாளர் சங்கங்கள் சில கருத்துக்களை தெரிவித்து வருவதால் வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று மதியம் 3 மணிக்கு தலைமை செயலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தலைமை செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *