இந்தியாவில ஒருநாளில் புதிதாக 12,193 பேருக்கு கொரோனா
1 min read
12,193 new corona cases in India in one day
22.4.2023
இந்தியாவல் ஒருநாளில் புதிதாக 12,193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 12,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாதிப்பு 8 மாதங்களில் இல்லாத அளவில் நேற்று முன்தினம் 12,591 ஆக உயர்ந்து இருந்தது. நேற்று 11,692 ஆக குறைந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 2,403, டெல்லியில் 1,758, அரியானாவில் 1,348, மகாராஷ்டிராவில் 993, உத்தரபிரதேசத்தில் 988 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 48 லட்சத்து 81 ஆயிரத்து 877 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 10,765 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 42 லட்சத்து 83 ஆயிரத்து 21 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 67,556 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 1,386 அதிகமாகும். கொரோனா பாதிப்பால் நேற்று டெல்லியில் 8 பேர், மகாராஷ்டிராவில் 5 பேர், கேரளா, உத்தரபிரதேசம், சத்தீஸ்கரில் தலா 3 பேர் உள்பட 32 பேர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட 10 மரணங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 300 ஆக உயர்ந்துள்ளது.