May 4, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசி முன்னாள் எம்எல்ஏகே.ரவி அருணனுக்கு எக்ஸ்னோரா பாராட்டு

1 min read

Former Tenkasi MLA Exnora appreciation for K. Ravi Arunan

1.5.2023

தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை கண்டித்து தொடர்ந்து போராடிவரும் முன்னாள் தென்காசி, அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் கே ரவிஅருணனுக்கு தென்காசி மாவட்ட எக்ஸ்னோரா செயலாளர் எஸ்.சங்கர நாராயணன் நேரில் சந்தித்து கைத்தறி ஆடை அணிவித்து பாராட்டும் வாழ்த்தும் ஆதரவும் தெரிவித்துள்ளார்.

கனிமங்கள்

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான ராட்சத கனரக வாகனங்களில் இரவும் பகலுமாக கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கனிமவளக் கடத்தல் சம்பந்தமாக பல்வேறு சமூக நல அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை வைத்த நிலையிலும் தொடர்ந்து கனிம வள கடத்தல் நடந்து கொண்டே இருக்கிறது.

இதனை கண்டித்து முன்னாள் தென்காசி, அம்பாசமுத்திரம், சட்டமன்ற உறுப்பினர் கே.ரவி அருணன் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகள், மற்றும் தமிழக முதலமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர், கனிமவளத்துறை அமைச்சர், நீர்வளத்துறை அமைச்சர், தமிழக ஆளுநர் ஆகியோருக்கும் தொடர்ந்து பல்வேறு ஆதாரங்களுடன் கனிமவள கடத்தலை தடுத்து நிறுத்த கோரி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

ஆனாலும் தொடர்ந்து கனிமவளக்கடத்தல் நடைபெற்றது வருவதால் நீதிமன்றம் மூலமாக நடவடிக்கை மேற்கொள்வதோடு, பொது மக்களை திரட்டி தென்காசி, கடையம், பாவூர்சத்திரம், செங்கோட்டை, புளியரை, உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகிறார்.

பாராட்டு

தமிழகத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கனிமவளக் கடத்டதலை தடுத்து நிறுத்த கோரி தொடர்ந்து, தொய்வின்றி போராடிவரும் முன்னாள் எம்எல்ஏ கே.ரவி அருணனை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி வரும் நிலையில் தென்காசி மாவட்ட எக்ஸ்னோரா செயலாளர் எஸ்.சங்கர நாராயணன் நேற்று சந்தித்து கைத்தறி ஆடை அணிவித்து அவருக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்ததோடு தென்காசி மாவட்ட எக்ஸ்னோரா தங்களின் போராட்டத்திற்கு துணை நிற்கும் என்றும் உறுதி கூறினார்.

மேலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ரவி அருணன் தென்காசி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 300க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்ததோடு இன்று வரை தென்காசி சட்டமன்ற தொகுதி மக்களின் தாகத்தை தீர்த்து வரும் கே.ரவிஅருணன் பொதுமக்களின் நலன் கருதி நடத்தி வரும் போராட்டங்களுக்கு தென்காசி மாவட்டத்தில் வாழும் அனைத்து தரப்பு மக்களும் துணை நிற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.