June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி 32 வது ஆண்டு நினைவு தினம்

1 min read

32nd anniversary of Rajiv Gandhi by Congress in Tenkasi

22-.5-.2023
முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார் தலைமையில் ராஜீவ்காந்தி திருவுரவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தென்காசி கீழ ரத வீதியில் உள்ள காந்தி சிலை அருகில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும், தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பழனி நாடார் தலைமையில் அலங்கரிக்கப்பட்ட ராஜீவ் காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் ஆயிரப்பேரி தி. உதய கிருஷ்ணன், தென்காசி மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் வைகை குமார், மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் ஏஜிஎம். கணேசன், காஜாமைதீன், தென்காசி வட்டார காங்கிரஸ் தலைவர் பெருமாள், தென்காசி மாவட்ட காங்கிரஸ் செயலாளர்கள் சபரி முருகேசன், கோவிந்தராஜுலு, கண்ணன், தென்காசி நகர துணைத் தலைவர்கள் தேவராஜன், சித்திக், செயலாளர் பீர் முகம்மது, பொருளாளர் ஈஸ்வரன், தென்காசி மாவட்ட சிவாஜி சமூகநல மன்ற தலைவர் தென்காசி என்.கணேசன், நகராட்சி கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், ரபீக், சிறுபான்மை பிரிவு நகர தலைவர் சலீம், ஏஎல்என்.ஆறுமுகம், கு.மூர்த்தி உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *