May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை குழப்பிய பதனீர்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Pathaneer who confused Kannayira/ comedy story/ Tabasukumar

27.5.2023
கண்ணாயிரம் தன் மனைவியுடன் குற்றாலத்துக்கு சுற்றுலாசென்றார்.அங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க தடைவிதிக்கப்பட்டது. எனவே பாபநாசம் சென்று அகஸ்தியர் அருவியில் குளிக்கலாம் என்று பயில்வான் கூறியதால் கண்ணாயிரம் மகிழ்ச்சியுடன் அங்குசெல்ல தயாரானார்.சூட்கேஸ் மற்றும் ஒருபக்கேட்டில் தாமிரபரணி தண்ணீரை தூக்கிக்கொண்டு புறப்பட்டார்.
அவரது மனைவி பூங்கொடி ஒரு டிரெங் பெட்டியைத் தூக்கியவாறு ஓட்டல் கதவை பூட்டினார். சுற்றுலா பஸ் ஹாரன் அடித்ததும்..கண்ணாயிரம்..தன் மனைவியிடம்..ஏய்..சீக்கிரம் புறப்படு என்று அவசரப்படுத்தினார்.
பூங்கொடியோ..நீங்க போங்க..நான் ஓட்டலில் சாவியை கொடுத்துவிட்டு வருகிறேன் என்று சொன்னார். உடனே கண்ணாயிரம் சூட்கேஸ் ஒரு கையிலும் தண்ணீர் பக்கெட் மறுகையிலும் ஏந்தியபடி பஸ்சை நோக்கி நடந்தார். அப்போது சுடிதார் சுதா இளைஞர்கள் புடைசூழ பேக்குகளை தூக்கிக்கொண்டு பஸ்சுக்கு வந்தார். துபாய்க்காரர் அவர் மனைவியுடன் அங்குவந்து சேர்ந்தார்.
கண்ணாயிரம் பஸ்சில் ஏற்கனவே இருந்த இடத்துக்கு சென்று இடம்பிடித்தார். பூங்கொடிக்காக இருக்கையில் துண்டுபோட்டு இடம்பிடித்தார். தண்ணீர் பக்கெட்டை இருக்கைக்கு கீழே வைத்தார்.. குற்றாலத்துக்குவந்து குளிக்க முடியலையே.. பாபநாசம்போயி நல்லா குளிச்சிடணும்..விடப்படாது என்று நினைத்துக்கொண்டார்.
என்ன பூங்கொடியை இன்னும் காணோம்..ஓட்டல்பில் கட்டிட்டுவர இவ்வளவு நேரமா என்று அவர் நினைத்தபோது பூங்கொடி கத்தியவாறு பஸ்சில் ஏறினார்.
என்னவிலை..இதுக்குத்தான் தங்கியிருக்கிற ஓட்டலில் சாப்பிடக்கூடாது..விலையை தீட்டியிருவாங்க..என்றபடி கண்ணாயிரம் அருகில் வந்தார்.
அவர்..என்ன என்று கேட்க..எல்லாம் முட்டை தோசை பிரச்சினைதான்..முட்டைக்குத்தனி தோசைக்குத்தனி என்று வசூலிப்பாங்க போலிருக்கு..என்ன கோழி ஜப்பான் கோழியா..நம்ம ஊர் கோழிதானே ..முட்டைவிலை அவ்வளவு கூடுதலா என்று சத்தம்போட்டார்.
கண்ணாயிரம் பதில் சொல்லாமல்..அமைதியாக இருந்தார். பூங்கொடியோ..இனி முட்டை தோசைன்னு கேட்டிய அவ்வளவுதான் என்று கண்ணாயிரம் கன்னத்தில் இடித்தார்.
அதற்கு கண்ணாயிரம்..நான் தோசை முட்டைதான் கேப்பேன் என்க பூங்கொடி அவரை முறைத்துப்பார்த்தார். அந்த நேரத்தில் பயில்வான்வந்து பஸ்சில் ஏறினார்.. என்ன எல்லோரும் வந்தாச்சா.. எல்லாபொருளையும் எடுத்துவந்திட்டிங்களா ..சரியா செக்பண்ணிக்கிங்க ..பிறகு அதைக்காணோம்..இதைக்காணோமுன்னு சொல்லக்கூடாது என்றார்.
எல்லோரும் கொண்டுவந்த பொருட்கள் சரியாக இருக்கா என்று சரிபார்த்தனர்.
டிரைவர் மற்றும் மாற்று டிரைவர் பஸ்சில் ஏறி அமர்ந்தார்கள்…பயில்வான் பஸ்சினுள்ளே சுற்றிப்பார்த்துவிட்டு..பஸ் இப்போ பாபநாசம் போகுது..அங்கே குளிக்கலாம் என்றவர் டிரைவரிடம்..டிரைவர்..பாபநாசம் போங்க என்று சொன்னார்.
அடுத்த நிமிடம் பஸ் குற்றால ஓட்டலில் இருந்து புறப்பட்டது. கண்ணாயிரம் கண்ணாடிவழியாக வெளியே எட்டிப்பார்த்தார்.
பஸ் பறந்து சென்றது.கு ற்றால அருவிகளில்வெள்ளம் கொட்டியது. கண்ணாயிரம் அருவியை பார்த்தபடி வந்தார். பஸ் பழைய குற்றாலம் விலக்கை தாண்டி.. வேகமாக சென்றது.
வழியில் தென்காசி சாலை சந்திப்பில் ரோட்டோரத்தில் பதனீர் நுங்கு விற்பனை செய்து கொண்டிருந்தனர். அதைப்பார்த்ததும் கண்ணாயிரம் ..ஆ..எனக்கு பதனீர்..எனக்கு நுங்கு என்று சத்தம் போட்டார்.
அதைக்கேட்ட பயில்வான் உடனே டிரைவரிடம்..டிரைவர் கொஞ்சம் நிறுத்துங்க..பதனீர் குடிச்சிட்டுப்போவோம் என்க டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.
கண்ணாயிரம் ..சுடிதார் சுதா பயில்வான் மற்றும் பூங்கொடி பஸ்சைவிட்டு இறங்கினார்கள். கண்ணாயிரம்..வேகவேகமாக பதனீர் விற்ற இடத்துக்கு ஓடினார். அங்கு பனை ஓலை பட்டையில் செம்பிலிருந்து பதனீரை ஊற்றினார்கள். கண்ணாயிரம் கையிலும் ஒரு பட்டை கொடுக்கப்பட்டது. அதைவாங்கிய கண்ணாயிரம் பதனீர் விற்பனை செய்த வாலிபரிடம் ..இது சுத்தமான பதனீதானே என்று கேட்டார். அந்த வாலிபரும்..ஆமா..ஆமா என்றவாறு..கண்ணாயிரத்தின் பனை ஓலை பட்டையில் பதனீரை ஊற்றினார். பட்டையை நல்லாபிடிங்க.. கீழே சிந்திடும்..பதனீர் குடிங்க. .உடம்புக்கு நல்லது என்றார்.
கண்ணாயிரம் தலையை ஆட்டியவாறு பதனீர் ஊற்றிய பனை ஓலை பட்டையைப்பார்த்தார். அதில் பதனீருடன் தேனீக்கள் எறும்புகள் மிதந்தன.
ஆ..இது என் உதட்டை கடிச்சிருமே…என்று நினைத்த கண்ணாயிரம்..எறும்புகள் தேனீக்கள் கரையில் ஒதுங்கவேண்டி..பூ…பூ..பூ..என்று ஊதினார். பதனீர் குடிக்காமல் கண்ணாயிரம் ஊதிக்கொண்டிருப்பதைப்பார்த்த சுடிதார்சுதா.. என்ன கண்ணாயிரம் பதனீர் சுடுதா என்று கேட்க கண்ணாயிரத்துக்கு தூக்கிவாரிப்போட்டது.
என்ன என்று கேட்க..சுடிதார்சுதாவோ…பதனீரை குடிக்காம ஊதிக்கிட்டே இருக்கீயளே..அதுதான் சுடுதான்னு கேட்டேன் என்றாள்.
அதைக்கேட்ட கண்ணாயிரம் வெட்கத்துடன் சிரிக்க..பூங்கொடி விரைந்துவந்து.. ஒரு பட்ட பதனீர் குடிக்க..இவ்வளவு நேரமா..எறும்பு கிடந்தா என்ன..குடிங்க குடிங்க..என்க..கண்ணாயிரம் என்னசெய்வது என்று புரியாமல் விழித்தார். பூங்கொடியோ..கண்ணை மூடிக்கிட்டு குடிங்க என்று கத்த.. கண்ணாயிரமோ..என்ன பூங்கொடி. புரியாம பேசுற. கண்ணை கையால் பொத்திக்கொண்டால் எப்படி பட்டையைபிடிச்சி பதனீர் குடிக்க முடியும் என்று கேட்க…பூங்கொடி எரிச்சலுடன்..கண்ணை கைவச்சிதான் மூடணுமா..அடபோங்க..வெறுமெனே கண்ணை இறுக்கி மூடிக்கிட்டு பதனீயை குடிங்க..எறும்பு தேனீ எதுவும் தெரியாது என்றார்.
கண்ணாயிரம் கண்களை மூடிக்கொண்டு பதனீரை மடக்மடக் என்று குடித்தபோது..வாயில் ஒரு எறும்புசிக்கிக்கொண்டது. அப்போது பதனீர் வியாபாரி பல்லை கடித்துக்கொண்டு குடியுங்க என்றார். பல்லை கடித்தால் எப்படி குடி்க்க முடியும் என்க.. பல்லை பட்டையில் லேசா கடிச்சபடி குடிச்சா எறுப்பு வாய்க்குள் போகாது என்றார்.
பற்களுக்கு வெளியே சிக்கிய எறும்புகள் சிக்கிக்கொண்டன.
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.