செங்கோட்டையில் நான் முதல்வன் திட்ட இலவச பயிற்சி வகுப்பு- மாவட்ட ஆட்சியா் தொடங்கி வைத்தார்
1 min read![](https://www.seithisaral.in/wp-content/uploads/2023/05/செங்கோட்டை-நிகழ்ச்சி-1024x576.jpg)
Inauguration of Nan Muluvan Project free training course at Senkottai- District Govt
30.5.2023
தென்காசி மாவட்டம் செங்கோட்டை முழு நேர அரசு பொதுநுாலக கட்டிடத்தில் வைத்து நான் முதல்வன் திட்டம் வாயிலாக சுமார் 150 மாணவர்களுக்கு மத்திய தேர்வாணயம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளின் துவக்க விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவா் துரை.இரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற செயலாளா் மயிலேறும்பெருமாள், பயிற்சி அலுவலா் சதாசிவன் ஆகியோர் முன்னிலைவகித்தனா். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ரம்யா அனைவரையும் வரவேற்று பேசினார். அதனைத் தொடா்ந்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவா் துரை.இரவிச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றி பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சியா் பேசியதாவது;-
தென்காசி மாவட்டம் செங்கோட்டை முழு நேர அரசு பொதுநுாலக கட்டிடத்தில் நான் முதல்வன் திட்டம் வாயிலாக சுமார் 150 மாணவர்களுக்கு மத்திய தேர்வாணயம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளின் துவக்க விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது.
இந்த இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக முன்னனி நிறுவனமான வராண்டா ரேஸ் பயிற்றுநர்களை வைத்து 100 நாட்கள் நடைபெற உள்ளது. எனவே இதில் பங்கெடுத்த மாணவர்கள் இந்த சிறப்பான பயிற்சியை திறம்பட முடித்து அரசு பதவிகளுக்கு தேர்வாகி வாழ்வில் உயர்ந்த நிலை வர வேண்டும் என உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் நுாலக வாசகர் வட்ட செயலாளா் செண்பகக் குற்றாலம், நுாலகர் கோ.இராமசாமி , நுாலக அரசுத் தேர்வு பொறுப்பாளா் விழுதுகள் சேகர் உள்பட பலா் கலந்து கொண்டனா். பயிற்சி வகுப்பில் செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 150 மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனா். முடிவில் வாசகர் வட்ட பொருளாளா் தண்டமிழ்தாசன் பா.சுதாகர் அனைவருக்கும் நன்றி கூறினார்.