தென்காசியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
1 min read
Tamil Nadu Primary School Teachers Alliance Demonstration in Tenkasi
30.5.2023
தென்காசியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு முறைகளை கண்டித்து பதவி உயர்வு மற்றும் கலந்தாய்வுகளை நேர்மையாக உடனே நடத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட தலைவர் ரமேஷ், தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் லட்சுமி மாவட்ட துணைச் செயலாளர் கீதா கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
கல்வி மாவட்டத் தலைவர் சுதர்சன் அனைவரையும் வரவேற்று பேசினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தூர்பாண்டியன் மாநில துணைத்தலைவர் சதீஷ்குமார் மாநில செயலாளர் பிச்சைக்கனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
. தென்காசி கல்வி மாவட்ட செயலாளர் சிவக்குமார் மாநில பொதுக்குழு உறுப்பினர் மாடசாமி மாவட்டத் துணைத் தலைவர் சாகிரா கல்வி மாவட்ட தலைவர் மாணிக்கம் ஆகியோர் கோரிக்கை உரை ஆற்றினார் மாவட்ட செயலாளர் மாரிமுத்து மாவட்ட பொருளாளர் மணிமேகலை கல்வி மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் கோரிக்கை விளக்க உரை ஆற்றினார்ராஜ்குமார் சிறப்புரை ஆற்றினார்
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு பாதகம் ஏற்படும் வகையில் தொடக்கக் கல்வித் துறையில் முறைகேடாகவும் விதிகளுக்கு புறம்பாகவும் தொடர்ந்து நிர்வாக மாறுதல் என்ற பெயரில் பணிமாறுதல்ஆணை வழங்கப்படுவதை கண்டித்தும்
முறைகேடாக வழங்கப்பட்ட நிர்வாக மாறுதல்களை ரத்து செய்யக் கோரியும் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை ஒளிவு மறைவின்றி நேர்மையாக நடத்திட வலியுறுத்தியும் ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு தேவையில்லை என்ற கொள்கை முடிவை தமிழ்நாடு அரசு உடனே எடுத்து அதை நீதிமன்றத்தில்சமர்ப்பித்திடவலியுறுத்தியும்
ஆசிரியர்களின் பதிவு உயர்வு மற்றும் எஞ்சிய மாறுதல் கலந்தாய்வை விரைந்து நடத்திட வலியுறுத்தியும் கூடுதல் தேவை பணியிடங்களை கடந்த பொது மாறுதலில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணி நிரவலில் சென்ற ஆசிரியர்களுக்கு வழங்கிட அனுமதிக்க வேண்டியும் என உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முடிவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் துரைராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்