தென்காசியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு வாகனம்
1 min read
Anti-tobacco awareness vehicle in Tenkasi
31.5.2023
மே 31 புகையிலை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு திருநெல்வேலி தென்காசி மாவட்ட பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பாக மே.31 புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் நடமாடும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி வாகனம் துவக்கி வைக்கப்பட்டது.
இன்றைய உலகில் பலரும் புகை , போதைப் பொருட்கள் , டிஜிட்டல் சாதனங்களின் மொபைல் , இன்டர்நெட்தவறான பயன்பாடு போன்ற பல தீய பழக்கங்களுக்கு அடிமையாகி உடல் நோய் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்கள் . ஏன் அடிமை ஆகிவிட்டார்கள் ? வாழ்வில் வரும் குடும்ப பிரச்சினைகள் , தோல்விகள் , வியாபாரத்தில் நஷ்டம் , தவறான சேர்க்கை , பொருளாதார சூழ்நிலை போன்றவைகளை எதிர்கொள்ள முடியாமல் தன்னம்பிக்கையை இழந்து விட்டார்கள் .
இளைஞர்களிடம் உள்ள விபரீதமான தவறான ஆசைகள் இவற்றை சமூக கௌரவம் என்று நினைக்கிறார்கள் . இதில் சந்தோசம் உள்ளது என்று நினைக்கிறார்கள் . போதையினால் பல்வேறு தீய விளைவுகள் ஏற்படுகின்றன குறிப்பாக நடத்தை மாற்றங்கள் , மனநிலை கோளாறுகள் , மனச்சோர்வு , சமூகவிரோத செயல்கள் . புற்றுநோய் , இதய நோய்கள் போன்ற மோசமான வியாதிகளுக்கு ஆளாகின்றனர தீய பழக்கத்தில் இருந்து விலக பெற்றோர்கள் , நல்ல நண்பர்களிடம் தனது பிரச்சனைகளை மனம் விட்டு பேசுங்கள் தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள் உடலை மனதை ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுத்துங்கள் கெட்ட விஷயங்களை பார்ப்பதை கேட்பதை தவிர்த்து விடுங்கள் தியானம் , யோகா போன்ற பயிற்சிகளை கட்டாயம் செய்யுங்கள் தியானம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் மன அமைதி மற்றும் தெளிந்த சிந்தனை கிடைக்கிறது.
மன ஆரோக்கியம் மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது தீய பழக்கங்களிலிருந்து மனம் விடுபடுகிறது ஒழுக்கம் நிறைந்த கட்டுப்பாடான வாழ்க்கை வாழ முடிகிறது : உண்மையான மனதின் ஆனந்தத்தை அனுபவம் செய்ய முடிகிறது தீய பழக்க வழக்கங்களால் பாதிக்கப்பட்ட பலர் தியானத்தின் மூலம் அவற்றிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கிறார்கள்
அதன்படி போதை இல்லாத தமிழகம் என்ற தலைப்பில் தென்காசி புதிய பஸ் நிலையம் முன்பு நடமாடும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி வாகனம்
துவக்கி வைக்கப்பட்டது.இதில் மது புகை பழக்கத்தினால் விளையும் தீமைகள் என்ன, ராஜயோக தியானத்தின் மூலம் தீய பழக்கங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வது எப்படி என்பது பற்றி பிரம்மா குமாரிகள் சேவை ஒருங்கிணைப்பாளர் விகடன் சிவபாலன் விளக்கம் அளித்தார். திருநெல்வேலி பிரம்மா குமாரிகள் அமைப்பின் பொறுப்பாளர் புவனேஸ்வரி, சுகாதாரத்துறை அலுவலர்கள் தொற்று நோய் நிபுணர் தண்டாயுதபாணி, பூச்சியியல் நிபுணர் பாலாஜி, சுகாதாரத்துறை பயிற்றுனர் ஆறுமுகம் அனைவரும் சேர்ந்து புகையிலை ஒழிப்பு கண்காட்சி வாகனத்தை துவக்கி வைத்தனர்.
இந்த புகையிலை ஒழிப்பு படவிளக்க கண்காட்சி வாகனம் தென்காசி சுற்றியுள்ள பாவூர்சத்திரம் சுரண்டை கடையநல்லூர் செங்கோட்டை ஆகிய ஊர்களுக்கு சென்று பொது மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.இதற்கு பிரம்மா குமாரிகள் அமைப்பின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் அந்தந்த பகுதி பொதுமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
-முத்துசாமி, நிருபர்