வல்லம் ஊராட்சியில் 5 லட்சம் செலவில் சிமெண்ட் சாலைப்பணி தொடக்கம்
1 min readCement road work started in Vallam panchayat at a cost of 5 lakhs
31.5.2023
தென்காசி மாவட்டம், தென்காசி ஊராட்சி ஒன்றியம், வல்லம் ஊராட்சி சித்திவிநாயகர் கோவில் குறுக்குத் தெருவில் ரூபாய் 5 லட்சத்து 10 ஆயிரம் செலவில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் சே.ஜமீன்பாத்திமா சேக்தாவூது துவக்கி வைத்தார்.
தென்காசி ஊராட்சி ஒன்றியம் வல்லம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வல்லம் சித்தி விநாயகர் கோவில் குறுக்கு தெரு பொதுமக்கள் அந்த தெருவில் சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட வல்லம் பஞ்சாயத்து தலைவர் சே.ஜமீன்பாத்திமா வல்லம் ஊராட்சி சித்திவிநாயகர் கோவில் குறுக்குத் தெருவில் சிமெண்ட் சாலை அமைத்திட நடவடிக்கை மேற்கொண்டார்.
அதன்படி தென்காசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மா.மாணிக்கவாசகம் (வ.ஊ) ,வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) செ.குழந்தைமணி ஆகியோரின் ஆலோசனையின் படி திட்டமதிப்பீடு பெறப்பட்டு நேற்று வல்லம் சித்திவிநாயகர் கோவில் தெருவில் ரூபாய் 5 லட்சத்து 10 ஆயிரம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியின் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு வல்லம் ஊராட்சி மன்றத் தலைவர் சே.ஜமீன் பாத்திமா ஷேக்தாவூது தலைமை தாங்கினார். வல்லம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ந.முருகேசன் முன்னிலை வகித்தார் வல்லம் ஊராட்சி செயலாளர் அ.சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் வல்லம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சீ.சுந்தரி, மா.செய்யது அலி பாத்திமா, மு.சங்கீதா, கா.செல்வி செ.இசக்கியம்மாள், செ.சாகுல் ஹமீது, நா.திவான் மைதீன், மு. முபாரக் அலி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணித்தள பொறுப்பாளர் தெய்வத்தாய் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வல்லம் ஊராட்சிசித்திவிநாயகர் கோவில் தெரு பகுதி பொதுமக்கள் இந்த பகுதி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமான நிலையில் இருந்த சித்திவிநாயகர் கோவில் குறுக்குத் தெருவை சீரமைத்து புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை துவக்கி வைத்துள்ள வல்லம் ஊராட்சி மன்றத் தலைவர் சே. ஜமீன் பாத்திமா ஷேக்தாவுதுவிற்கு நன்றி தெரிவித்தனர்.