June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

ஒடிசா ரெயில் விபத்தில் காயம் அடைந்தவர்கள் குணம் அடைய தோரணமலையில் கூட்டு பிரார்த்தனை

1 min read

Joint prayers at Thoranamalai for the recovery of those injured in the Odisha train accident

4.5.2023
ஒரிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் பூரண குணமடைய வேண்டி தோரணமலை முருகன் கோயிலில். இன்று காலை கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

தோரணமலை கிரிவலம்

தென்காசி மாவட்டம் தென்காசி- கடையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில். இந்த கோவிலில் உள்ள முருகனை அகஸ்தியர் தேரையர் உள்ளிட்ட சித்தர்களும், முனிவர்களும் வழிபட்ட பெருமையும், சிறப்பு உடையதாகும்

இந்த கோவிலில் மாந்தோமூ பௌர்ணமி கிரிவலம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் வைகாசி விசாகம் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்ட நிலையில் இன்று வைகாசி மாத கிரிவலம் நடந்தது. அதிகாலை 5.30 மணிக்கு விநாயகர் சன்னதி பின்புறம் இருந்து கிரிவலம் புறப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். சுமார் ஒன்றரை மணி நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் முடிந்து வந்தனர்.

கிரிவலம் முடிந்த பின்பு கூட்டு பிரார்த்தனை நனடந்தது. ஒரிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி் அடைய பிரார்த்தனை செய்யப்பட்டது. மேலும் காயம் அடைந்தவர்கள் விரைவில் பூரண குணம் பெற வேண்டப்பட்டது. மேலும் இது போன்ற விபத்துக்கள் நடைபெற கூடாது என்றும் பிரார்த்திக்கப்பட்டது.
மேலும் பக்தர்கள் கூட்டாக எழுப்பிய வேண்டுதல் கோஷம் வருமாறு:-
‘முருகா…முருகா.. தோரணமலை முருகா…
மும்மாரி மழைபொழிய அருள்வாய் முருகா!
வையகம் செழிக்க அருள்வாய் முருகா!
விளைச்சல் பெருக வைப்பாய் முருகா!
விவசாயி வாழ்வை உயர்திடுவாய் முருகா!
தியாகிகள் குடும்பம் சிறக்கட்டும் முருகா!
நாட்டை காக்கும் வீரர்கள் வீட்டை காப்பாய் முருகா!
தொழில் வளம் பெருக வேண்டுமே முருகா!
மாணவர்கள் கல்வியில் சிறக்க வேண்டும் முருகா!
வாசிக்கும் பழக்கத்தை தந்திடுவாய் முருகா!
பீடி சுற்றுவோரும் கைத்தொழில் செய்வோரும் சிறப்படைய வேண்டுமே முருகா!
மனிதாபிமானத்தை ஊட்டிடுவாய் முருகா!
நேர்மையாய் வாழவைப்பாய் முருகா!
ஊழலை ஒழித்திடுவாய் முருகா!
உயர்த்திடுவாய் நாட்டையே முருகா!
மேற்கண் வேண்டுதல் கூட்டு பிரார்த்தனையில் வைக்கப்பட்ட்து.

பிரார்த்தனையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்திருந்தார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *