August 17, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 230 மனுக்கள் பெறப்பட்டன

1 min read

230 petitions were received in Tenkasi People’s Grievance Day meeting

6.6.2023
தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா உள்பட 230 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்த அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

மக்கள் குறைதீர்க்கும் நாள்

தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார். 230 மனுக்கள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோரு தல், பட்டாமாறுதல், மாற்ற த்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 230 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா? என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், உதவி ஆணையர் (கலால்) ராஜ மனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சங்கரநாராயணன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் (பொறுப்பு) நடராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *