August 17, 2026

Seithi Saral

Tamil News Channel

கீழப்பாவூர் அருகே நின்ற கார் மீது மினி வேன் மோதியது

1 min read

A mini-van collided with a car parked near Keelapavoor

17.8.2026
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் அருகே நின்ற கார் மீது கூரியர் கம்பெனி மினி வேன் மோதி டிரைவர் படுகாயமடைந்தார்.

ஆலங்குளம் அருகேயுள்ள மருதப்பபுரம் மெயின்ரோட்டை சேர்ந்த செல்லத்துரை மகன் சுரேஷ்குமார் (வயது37) என்பவர் தனது காரில் தென்காசி செல்வதற்காக நெல்லை – தென்காசி நான்கு வழிச்சாலையில் கீழப்பாவூர் விலக்கு அருகில் இன்று மதியம் காரை நிறுத்தி விட்டு வெளியில் நின்று போன் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது திருநெல்வேலி – தென்காசி நான்கு வழிச்சாலையில் ஆலங்குளத்தில் பாவூர்சத்திரம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் கொரியர் நிறுவனத்திற்கு சொந்தமான மினி வேன் எதிர்பாராதவிதமாக நின்று கொண்டிருந்த கார் மீது பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் கார் அருகில் இருந்த பள்ளத்தில் பாய்ந்து நின்றது. மோதிய வேகத்தில் மினிவேனை ஓட்டி வந்த ஆலங்குளம் மங்கம்மா சாலையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் தினேஷ் (வயது 20) பலத்த காயமடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த பாவூர்சத்திரம் சப்&இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த தினேஷை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *