June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு கள் குடித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினர்

1 min read

The Hindu People’s Party protested in front of the Nellie collector’s office

6.6.2023
நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு கள் குடித்து இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். டாஸ்மாக் கடைகளை மூடி, கள்ளச்சாராயத்தை தடுத்து நிறுத்தி கள் விற்பனைக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.

ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் போலி மதுபான கடைகளையும் அடைத்து கள்ளுக்கடைகளை திறக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் தென்மண்டல தலைவர் கார்த்திசன், மாநில துணைத்தலைவர் உடையார் மற்றும் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் பாட்டில்களில் கள் கொண்டு வந்து குடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர்கள் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடி, கள்ளச்சாராயத்தை தடுத்து நிறுத்தி கள் விற்பனைக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *