August 17, 2026

Seithi Saral

Tamil News Channel

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பதிவு- குற்றாலம் போலீசில் புகார்

1 min read

Complaint filed with Courtallam police regarding a defamatory post about Chief Minister Vijay.

16.8.2026
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாக இணையதளத்தில் தேவையற்ற பதிவுகளை பதிவு செய்த தென்காசியை சேர்ந்த ராம்குமார் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக நிர்வாகிகள் குற்றாலம் காவல் நிலையத்தில் புகார்

தமிழக வெற்றி கழகம் குற்றாலம் பேரூர் கழகம் சார்பில் தென்காசி மத்திய மாவட்ட செயலாளர் ராஜபிரகாஷ் அறிவுறுத்தலின்படி குற்றாலம் பேரூர் கழகச் செயலாளர் ஜெய் சாய்குமார் ஆலோசனையின் பேரின் தமிழக வெற்றி கழக ஒன்றிய நிர்வாகி குத்தாலம் இசக்கி பாண்டியன் தலைமையில், பேரூர் கழக இணை செயலாளர் வழக்கறிஞர் குரு, கழக நிர்வாகிகள் குற்றாலம் சுரேஷ், சூரிய பிரகாஷ், மணிகண்டன், கண்ணன், முத்து ஆகியோர் புகார் மனு அளித்தனர்.

இந்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில்
குற்றாலம் பேருந்து நிலையத்தில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *