விளைபொருளுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை உயர்வு -மத்திய அமைச்சரவை ஒப்புதல்
1 min read
Increase in minimum purchase price of produce – Union Cabinet approves
7/6/2023
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பயிறு வகைகளுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
மந்திரி சபை
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதன்பின் மத்திய மந்திரி பியூஷ் கோயல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் கூறியதாவது:-
காரீஃப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. துவரம் பருப்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட தானிய வகைகளுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. நெல், உளுந்து, கம்பு, பருத்தி, சூரியகாந்தி விதை, நிலக்கடலை, பாசிப்பயிர் உள்ளிட்டவகைகளுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை உயர்த்தியது. பருத்தி, கம்பு, உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையும் அதிகரித்துள்ளது.
நடுத்தர ரக பருத்திக்கான ஆதரவு விலை ரூ.3,750-ல் இருந்து ரூ.6.620 ஆக உயர்ந்துள்ளது. சோயா பீன்ஸ்-க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.2,560ல் இருந்து ரூ.4,600 ஆக உயர்ந்துள்ளது.
நிலக்கடலை குறைந்தபட்ச ஆதார விலை ஒரு குவிண்டால் 4,000 ரூபாயிலிருந்து 6,377 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
சூரியகாந்தி விதை குறைந்தபட்ச ஆதார விலை ஒரு குவிண்டால் 3,750 ரூபாயிலிருந்து 6,760 ரூபாயாக உயர்த்துப்பட்டு உள்ளது.
விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை உறுதி செய்யவும், பயிர் பல்வகைப்படுத்தலை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல்.
மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்த ரூ.89,000 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ஹுடா சிட்டி சென்டரில் இருந்து சைபர் சிட்டி, குருகிராம் மற்றும் ஸ்பர் முதல் துவாரகா எக்ஸ்பிரஸ்வே வரை மெட்ரோ இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.5,452 கோடி செலவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.