தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை
1 min read
Tenkasi District Chief Government Hospital Doctors Achievement.
20.6.2023
தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை. குடல் அழுகிய பெரியவருக்கு 3:30 மணி நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து அவரது உயிரை காப்பாற்றி உள்ளார்கள்.
தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி ( வயது 57) என்பவர் சுமார் ஆறு மாதகாலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார், கடந்த இரண்டு நாட்களாக அவருக்கு வயிற்றுவலி மிக அதிகமாக இருந்துள்ளது. .18.06.2023 அன்று மாலை ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் .அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நோயாளிக்கு பெருங்குடலில் அடைப்பு ஏற்பட்டதை கண்டறிந்து உடல்நிலை மோசமாக இருந்ததால் அவரை உடனடியாக அறுவை சிகிச்சை செய்யும் பொருட்டு தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை க்கு செல்ல பரிந்துரைக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 12.50 மணியளவில் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை யில் மிக மோசமான நிலையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். .அவரை பரிசோதித்த அறுவை சிகிச்சை மருத்துவர் விக்னேஷ் ஷங்கர் நோயாளிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டிய கட்டாயத்தை உணர்ந்து, மயக்கவியல் மருத்துவர் சுரேஷ் மில்லர் உடன் கலந்தாலோசித்து, அறுவைசிகிச்சைக்கு தேவையான அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டது, பின்னர் அறுவைசிகிச்சை குழுவுடன் இணைந்து விக்னேஷ் ஷங்கர் காலை 05.00 மணியளவில் அவருக்கு உயிர் காக்கும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தார்.
தென்காசி மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா அறுவை சிகிச்சை பற்றி கூறுகையில் மருத்துவக் கல்லுரிகள் போன்ற இடங்களில் செயல்படும், இதுபோன்ற சிக்கலான அறுவைசிகிச்சை நமது தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை யில் நடைபெற்றது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,
ஒரு அரசு மருத்துவமனை யில் மூன்று மணி நேரத்திற்குள் இதுபோன்ற சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்திருப்பது, என்பது ஒரு பெரிய மைல்கல் ஆகும் என்றார்.
உறைவிட மருத்துவர் ராஜேஷ் , சிகிச்சையை சிறப்பாக செய்த மருத்துவக்குழுவினரை பாராட்டி அவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்,
இதுபோன்ற உயிர் காக்கும் அறுவைசிகிச்சைகள் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை
யில் நடைபெறுவதால் நோயாளிகள் இந்த வசதியினை பயன்படுத்தி நலம் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் என தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் இரா.ஜெஸ்லின் தெரிவித்துள்ளார்.