June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

பாவூர்சத்திரம் அருகே ஊருக்குள் புகுந்த மானை, நாய்கள் கடித்துக்கொன்றன

1 min read

A deer that entered the town near Bhavoorchatram was bitten by dogs

21.6.2023
பாவூர்சத்திரம் அருகே வழி தெரியாமல் ஊருக்குள் புகுந்த மானை தெருநாய்கள் கடித்துக் கொன்றன.

மான்

பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வழி தெரியாமல் ஊருக்குள் புகுந்த மான் ஒன்றை தெருநாய்கள் கடித்து குதறிக்கொண்டிருந்தன. அதனை கண்ட பொதுமக்கள் நாய்களை அங்கிருந்து துரத்தி விட்டு வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை அலுவலர் நேரில் வந்து பார்த்தபோது நாய்கள் கடித்ததில் மான் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இறந்த மான் பெண் மான் என்றும், அதற்கு 3 வயது இருக்கும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். பாவூர்சத்திரம் அருகே உள்ள கடப்போகத்தி பகுதியில் அமைந்துள்ள காட்டுப் பகுதியில் அதிகளவில் மான்கள் உள்ளது. அங்கிருந்து தப்பி ஊருக்குள் வந்த மானை நாய்கள் துரத்தி கடித்துள்ளதாக வனத்துறை அலுவலர் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *