மகனை திருத்த தற்கொலை மிரட்டல் விடுத்த ஆசிரியை சாவு
1 min readThe teacher who threatened to commit suicide to correct her son died
21.6.2023
செங்கோட்டையில் மகனை திருத்த மகன் கண் எதிரிலேயே தூக்கு மாட்டிக்கொண்டு சாகப்போவதாக கூறிய ஆசிரியை கயிறு இறுக்கி பரிதாபமாக இறந்தார்.
ஆசிரியை
தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. ஆசிரியை. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த இவர் கடந்த 15 வருடங்களாக மகனுடன் தனியாக வசித்து வந்தார்.
ஆசிரியை கிருஷ்ணவேணியின் மகன் சரியாக பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றியதாக தெரிகிறது. பலமுறை கண்டித்தும் பள்ளிக்கு சரியாக செல்வதில்லையாம்.
தற்கொலை மிரட்டல்
இதனால் மகனை திருத்துவதற்காக தற்கொலை செய்யப்போவதாக கூறி மிரட்டி உள்ளார். அத்துடன் மகன் கண் எதிரிலேயே தூக்கு மாட்டியுள்ளார். ஆனால் இதை மகன் சீரியசாக எடுத்துக்கொள்ளாமல் வெளியே சென்றுவிட்டான். ஆனால், தூக்கு மாட்டிய கிருஷ்ணவேணி அதில் இருந்து விடுபட முயன்றபோது எதிர்பாராதவிதமாக கழுத்தில் கயிறு இறுக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.