June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆலங்குளம் அருகே ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுனர் பலி

1 min read

Driver killed as auto overturns near Alankulam

7.6.2026
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே பயணிகள் ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநர் உயிரிழந்தார்.

ஆலங்குளம் அருகே கரும்பனூர் மேட்டுத்தெரு வைச் சேர்ந்தவர் மாடக்கண் என்பவரது மகன் கவிமணி(வயது 36). சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை, ஐந்தாங்கட்டளையில் உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு தனியாக தனது ஆட்டோவில் வந்தாராம். கரும்பனூர் அருகே வந்த போது, ஆட்டோ ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் மீட்கப்பட்டு, ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கவிமணி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இத்தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸார் கவிமணி சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். கவிமணிக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *